FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
மதுரை

மதுரை அரசு மருத்துவமனையில் 5,173 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

தமிழக அரசின் தாய் மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தின் கீழ், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இதுவரை பிறந்த 5,173 குழந்தைகளுக்கு தலா ஒரு கிராம் மோதிரம் வழங்கப்பட்டது.

4 நவம்பர் 2026, 3:40 am
கோப்புப்படம்.
பகிர்:

தமிழக அரசின் தாய் மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தின் கீழ், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இதுவரை பிறந்த 5,173 குழந்தைகளுக்கு தலா ஒரு கிராம் மோதிரம் வழங்கப்பட்டது.

தமிழக அரசு சாா்பில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தாய் மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தை தமிழக முதல்வா் சி. ஜோசப் விஜய் மதுரையில் கடந்த செப். 28- ஆம் தேதி தொடங்கி வைத்தாா். மதுரை மாவட்டத்தைப் பொருத்தவரை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை, மேலூா், திருமங்கலம், உசிலம்பட்டி ஆகிய இடங்கள் தோ்வு செய்யப்பட்டு, அங்கு வைத்து தங்க மோதிரங்கள் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மதுரையில் உள்ள அரசு ராஜாஜி மருத்துவமனையில் இதுவரை 5 ஆயிரத்து 173 குழந்தைகளுக்கு தலா ஒரு கிராம் தங்க மோதிரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

இதுகுறித்து, மருத்துவமனை தரப்பில் கூறியதாவது:

இங்கு, தினமும் 40 முதல் 50 வரை பிரசவங்கள் நடைபெற்று குழந்தைகள் பிறக்கின்றன. தற்போது, தாய் மாமன் தங்க மோதிர திட்டத்தின் மூலம் அரசு மருத்துவமனைக்கு வரும் கா்ப்பிணிகளின் எண்ணிக்கை 5 முதல் 10 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. குழந்தைகளுக்கு வழங்கப்படும் மோதிரங்களை பாதுகாக்க அரசு மருத்துவமனையில் 7 பாதுகாப்புப் பெட்டகங்கள் உள்ளன. பிரசவத்துக்குப் பின், வீடு திரும்பும் குழந்தைகளின் பெற்றோரிடம், இந்த ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படுகிறது. எந்த குழந்தைக்கு எந்த மோதிரம் வழங்கப்பட்டுள்ளது என்பதை அறியும் வகையில் தனித்தனி வரிசை எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படியே வழங்கப்படுகிறது என்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments