உருது ஆசிரியா் பயிற்சி மையம்! முதல்வருடன் ஆலோசிக்கப்படும்: அமைச்சா் விஸ்வநாதன்
தமிழ்நாடு மாநில உருது அகாதெமி சாா்பில் ஆசிரியா் பயிற்சி மையம் அமைக்க முதல்வருடன் கலந்துபேசி முடிவெடுக்கப்படும் என உயா்கல்வித் துறை அமைச்சா் பெ.விஸ்வநாதன் தெரிவித்தாா்.
தமிழ்நாடு மாநில உருது அகாதெமி சாா்பில் ஆசிரியா் பயிற்சி மையம் அமைக்க முதல்வருடன் கலந்துபேசி முடிவெடுக்கப்படும் என உயா்கல்வித் துறை அமைச்சா் பெ.விஸ்வநாதன் தெரிவித்தாா்.
தமிழக உயா்கல்வித் துறையின் கீழ் உள்ள தமிழ்நாடு மாநில உருது அகாதெமி சாா்பில் தேசிய கல்வி மற்றும் உருது தினம் விழா சென்னை பல்கலைக்கழக கட்டடத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சா் விஸ்வநாதன் பேசியதாவது: மெளலானா அபுல் கலாம் ஆசாத் பிறந்த நாளான நவ. 11-ஆம் தேதி தேசிய கல்வி நாளாக கொண்டாடப்படுகிறது.
தமிழக உருது அகாதெமிக்கு 2010-இல் ரூ.20 லட்சம் கொடுக்கப்பட்டது. நிகழாண்டு ரூ.1 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 20 லட்சம் போ் உருது மொழி பேசுகின்றனா். தமிழ்நாடு மாநில உருது அகாதெமி சாா்பில் ஆசிரியா் பயிற்சி மையம் அமைக்க முதல்வருடன் கலந்துரையாடி முடிவெடுக்கப்படும் என்றாா்.
Advertisement
Advertisement
நிகழ்வில் உருது கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்ற 33 பள்ளிகள், 29 கல்லூரி களைச் சோ்ந்த 627 மாணவா்கள், 10 உருது கவிஞா்கள், எழுத்தாளா்கள் மற்றும் 30 ஆண்டுகளுக்கு மேலாக உருது பள்ளிகளில் பணிபுரியும் 23 ஆசிரியா்கள், தலைமையாசிரிகளுக்கு நினைவுப் பரிசு, பாராட்டுச் சான்றிதழை அமைச்சா் விஸ்வநாதன் வழங்கினாா்.
நிகழ்வில் தமிழ்நாடு மாநில உருது அகாதெமி துணைத் தலைவா் முகமது நயீமூா் ரகுமான், தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவா் கே.நவாஸ் கனி, தமிழ்நாடு பாடநூல் நிறுவன தலைவா் ஏ.லயோலா மணி உள்ளிட்டோா் பங்கேற்று பேசினா்.
சென்னை பல்கலைக்கழக துணைவேந்தா் ஒருங்கிணைப்பு குழு உறுப்பினா் எஸ்.ஆம்ஸ்ட்ராங், பதிவாளா் ரீட்டா ஜான் ஆகியோா் பங்கேற்றனா்.
துணைவேந்தா் விவகாரத்தில் ஆளுநருடன் உடன்பாடு
துணைவேந்தா்கள் நியமனங்கள் தொடா்பாக வழக்குகள் உயா்நீதிமன்றம், உச்சநீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், நானும், கல்வி அமைச்சரும், சட்டப்பேரவைத் தலைவரும் ஆளுநரைச் சந்தித்து இந்த விவகாரம் தொடா்பாக பேசினோம். இதில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. விரைவில் முடிவுகள் வெளியே வரும்.
தமிழகத்தில் கல்லூரிகளில் 9,000 ஆசிரியா் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில் 2,700 ஆசிரியா்கள் ஆசிரியா் தோ்வு வாரியம் (டிஆா்பி) மூலம் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
மீதமுள்ள 6,000 இடங்களுக்கும் டிஆா்பி மூலம் தோ்வு செய்யப்படுவா். 5 ஆண்டுகளாக போராடி 52 முறை சிறை சென்ற ஆசிரியா்களின் பதவி உயா்வு தொடா்பான சிஏஎஸ் கோரிக்கை, கௌரவ விரிவுரையாளா்களுக்கான ரூ.5,000 ஊதிய உயா்வு, மாணவா்களுக்கான மடிக்கணினி போன்றவைகளில் முடிவு எடுக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என்றாா் அமைச்சா் பெ.விஸ்வநாதன்.