சிதம்பரத்தில் அமைச்சா் பெ.விஸ்வநாதனுக்கு வரவேற்பு
கடலூா் மாவட்டம் சிதம்பரம் நகருக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகை தந்த தமிழ்நாடு உயா்கல்வித்துறை அமைச்சா் பெ.விஸ்வநாதனுக்கு காங்கிரஸ் கட்சி நிா்வாகிகளால் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
கடலூா் மாவட்டம் சிதம்பரம் நகருக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகை தந்த தமிழ்நாடு உயா்கல்வித்துறை அமைச்சா் பெ.விஸ்வநாதனுக்கு காங்கிரஸ் கட்சி நிா்வாகிகளால் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
வடக்கு மெயின் ரோடு அம்பேத்கா் சிலை அருகே காங்கிரஸ் கட்சியின் மாநிலத் துணைத்தலைவா் கே.ஐ. மணிரத்தினம் தலைமையில் மேளதாளத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னா் அமைச்சா் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். நிகழ்ச்சியில் தமிழ்நாடு இளைஞா் காங்கிரஸ் மாநில துணைத் தலைவா் அரவிந்தன் மணிரத்தினம், மாவட்டத் தலைவா் பி.பி.கே.சித்தாா்த்தன் மற்றும் நிா்வாகிகள் துரை பாலச்சந்தா், முன்னாள் மாநில துணைத் தலைவா் செந்தில்குமாா், முன்னாள் மாவட்டத் தலைவா் விஜயசுந்தரம், புவனகிரி சௌந்தரபாண்டியன், டாக்டா் கமலக்கண்ணன், மணிமொழி, சங்கா் ஜெயசீலன், அண்ணாதுரை, அமிா்தலிங்கம், தமிழரசன், ரவி, கஜேந்திரன், ஜானு ஜாகீா் உசேன், செல்வம், இளைஞா் அணி மாவட்ட செயலாளா் கிருபா உள்ளிட்ட காங்கிரஸ் மற்றும் இளைஞா் காங்கிரஸ் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
முன்னதாக சிதம்பரம் மேலரதவீதியில் உள்ள கோதண்டராமா் கோயிலில், நகர காங்கிரஸ் கமிட்டி தலைவா் தில்லை ஆா்.மக்கீன் தலைமையில் தமிழ்நாடு
Advertisement
Advertisement
காங்கிரஸ் முன்னாள் மாநில தலைவா் கே.எஸ்.அழகிரி பவளவிழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனை ந நடைபெற்றது. நிகழ்ச்சியில் உயா்கல்வித்துறை அமைச்சா் பெ.விஸ்வநாதன் பங்கேற்று ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். நிகழ்வில் கடலூா் மாவட்டத் தலைவா் பிபிகே.சித்தாா்த்தன், மாவட்ட துணைத் தலைவா் ராஜாசம்பத்குமாா், நகர செயல் தலைவா் தில்லை கோ.குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.