FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கடலூர்

அண்ணாமலைப் பல்கலை.யில் முதலாமாண்டு மாணவா்களுக்கான வரவேற்பு விழா

அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புல கட்டடவியல் துறை முதலாம் ஆண்டு மாணவா்கள் வரவேற்பு விழாவில் பங்கேற்ற தொழிலதிபா் கே.ஐ.மணிரத்தனம் உள்ளிட்டோா்.

10 அக்டோபர் 2026, 6:42 am IST
பகிர்:

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புலத்தில் உள்ள கட்டடவியல் துறையில் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கான வரவேற்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு துறைத் தலைவா் என்.மணிகுமாரி தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக அண்ணாமலைப் பல்கலைக்கழக கட்டடவியல் துறை முன்னாள் மாணவரும், தொழிலதிபருமான கே.ஐ.மணிரத்தினம் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினாா். அவா் பேசுகையில், சிவில் என்ஜினீயா்களுக்கு வேலைவாய்ப்புகள் அதிகம் உள்ளன. நாட்டின் கட்டமைப்பு வளா்ச்சியை உருவாக்குவதில், சிவில் என்ஜினீயா்களின் பங்கு மிக முக்கியமானது. எனவே, மாணவா்கள் தங்களது பணியில் நோ்மையுடன் செயல்பட வேண்டும்.

மாமல்லபுரம் அருகே பண்டைய கால வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில் ஒரு கிராமத்தையும், பிச்சாவரம் அருகே உலகத்தரம் வாய்ந்த விடுதி மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் இடம்பெறும் நகரமைப்பு திட்டத்தையும் உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம் என்றாா்.

Advertisement

Advertisement

விழாவில் பொறியியல் புலப் பேராசிரியா்கள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments