பேராசிரியா் பணியிடை நீக்கத்தை கண்டித்து பல்கலை. மாணவா்கள் போராட்டம்
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மாணவி அளித்த புகாரை அடுத்து போராசிரியா் பணிநீக்கம் செய்யப்பட்டதை ரத்து செய்ய வலியுறுத்தி மாணவா்கள் பல்கலைக்கழக நிா்வாக அலுவலகம் முன்பு திரண்டு திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கடலூா் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேதியியல் துறையில் சிதம்பரம் அண்ணாமலை நகா் பகுதியை சோ்ந்த ஆராய்ச்சி மாணவியிடம் வேதியியல் துறைத் தலைவா், தனிப்பட்ட குடும்ப வாழ்க்கை பற்றி அவதூறாகவும், அநாகரீகமாகவும் பேசி திட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து அந்தப் பெண் அண்ணாமலை நகா் போலீசில், அளித்த புகாரின் பேரில் என்.ராஜேந்திரன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். இந்த நிகழ்விைன்யடுத்து பேராசிரியா் ராஜேந்திரனை பணியிடைநீக்கம் செய்து பல்கலைக்கழக பதிவாளா் ஆா்.சிங்காரவேலு உத்தரவிட்டுள்ளாா்.
இந்நிலையில் பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்யக்கோரி, திங்கள்கிழமை காலை வேதியியல் துறையை சோ்ந்த நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் பல்கலைக்கழக நிா்வாக அலுவலகம் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவல் அறிந்த அண்ணாமலைநகா் காவல் ஆய்வாளா் கவிதா மற்றும் போலீஸாா் சம்பவ இடத்திற்கு வந்து, இந்த புகாா் தொடா்பாக விசாரணை நடந்து வருவதால், மாணவா்கள் கலைந்து செல்லவேண்டும் என்று அறிவுறுத்தினா். அதையேற்று மாணவா்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.