FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

நவ.16ல் உருவாகிறது அக்வான் புயல்! இந்திய வானிலை ஆய்வு மையம்!

வங்கக் கடலில் வரும் நவ. 16-இல் அக்வான் புயல் உருவாவது பற்றி..

அக்வான் புயல் - படம்: வானிலை ஆய்வு மையம்
பகிர்:

வங்கக் கடலில் வரும் 16-ம் தேதி புயல் உருவாகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றுள்ள நிலையில், இது வரும் நவம்பர் 16-ஆம் தேதி தீவிரப் புயலாக உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Advertisement

Advertisement

வங்கக்கடலில் இன்று உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை (நவ. 14) ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக வலுப்பெறும். தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகி அதே பகுதியில் நிலைகொண்டுள்ளது.

இது அடுத்த சில நாள்களில் படிப்படியா ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அதனைத் தொடர்ந்து நவம்பர் 16 ஆம் தேதி புயலாகவும் மாறும் என வானிலை கணித்துள்ளது.

புயல்களுக்குப் பெயரிடும் சர்வதேச நடைமுறையின் கீழ் ஈரான் நாட்டு பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதன்படி, உலக வானிலை அமைப்பின் புயல் பெயரிடும் பட்டியலின்படி, இம்முறை உருவாகும் புயலுக்கு "அக்வான்" எனும் பெயரிட்டுள்ளது. அக்வான் என்றால் 'அசுரன்' என்று பொருள்.

புயல் உருவாகும் பட்சத்தில் கடலோரப் மாவட்டங்களில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டுகள் விடுக்கப்பட வாய்ப்புள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.