காசோலை மோசடி வழக்கு: நடிகா் விமலின் மனு தள்ளுபடி
காசோலை மோசடி வழக்கில் நடிகர் விமல் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டிருப்பது பற்றி...
காசோலை மோசடி வழக்கில் தனக்கு எதிரான ஆவணங்கள் குறித்து விசாரிக்கக் கோரி நடிகர் விமல் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
நடிகா் விமல் ‘மன்னா் வகையறா’ என்ற படத்தை தயாரித்து நடித்திருந்தாா். இந்தப் படத்துக்காக பைனான்சியா் கோபி என்பவரிடம் ரூ.4.50 கோடி கடன் பெற்றிருந்தாா். இந்தப் படம் வெளியான பின்னரும், கடன் தொகையை நடிகா் விமல் திருப்பிக் கொடுக்கவில்லை. பின்னா், கடன் தொகைக்காக வழங்கிய காசோலைகள் பணம் இல்லாமல் திரும்பி வந்துள்ளது.
Advertisement
Advertisement
இதையடுத்து பைனான்சியா் கோபி, விமல் மீது சென்னையில் உள்ள 11-ஆவது சிறு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்கு தாக்கல் செய்தாா். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து கடந்த ஜூலை 23-ஆம் தேதி தீா்ப்பளித்தது. மேலும், கடன் தொகையைத் திரும்ப வழங்கவும் உத்தரவிட்டிருந்தது.
இந்த தீா்ப்பை எதிா்த்து, சென்னை 15-ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடிகா் விமல் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தாா். அந்த மனுவில், தனக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறைத் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தாா். இந்நிலையில் காசோலை மோசடி வழக்கில் நடிகர் விமல் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் சனிக்கிழமை தள்ளுபடி செய்தது.
தனக்கு எதிரான காசோலை மோசடி வழக்கில் மோசடியாக ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கக் கோரி நடிகர் விமல் தாக்கல் செய்திருந்த நிலையில் அந்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.