FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

டிஜிட்டல் கைது மோசடி! ரூ. 1.31 கோடி இழந்த விவசாயி!

கர்நாடகத்தில் 62 வயது விவசாயி ஒருவரிடம் 'டிஜிட்டல் கைது' முறையில் 1.31 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது பற்றி...

13 அக்டோபர் 2026, 3:47 pm IST
டிஜிட்டல் கைது மோசடி - IANS
பகிர்:

கர்நாடகத்தில் 62 வயது விவசாயி ஒருவரிடம் 'டிஜிட்டல் கைத முறையில் 1.31 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது.

கர்நாடக மாநிலம் தக்ஷிண கன்னடா மாவட்டம் புத்தூர் வட்டத்தைச் சேர்ந்த அந்த விவசாயியை, மோசடிக்காரர்கள் வாட்ஸ்ஆப் விடியோ அழைப்பு மூலம் 'டிஜிட்டல் கைது' முறையில் அவரை மிரட்டி, பல்வேறு வங்கிக் கணக்குகளுக்குப் பணத்தை அனுப்புமாறு கட்டாயப்படுத்தியுள்ளனர்.

வங்கிக் கணக்குகளைச் சரிபார்க்கவும், அவர் கணக்கில் வைத்திருக்கும் பணத்தின் சட்டப்பூர்வத் தன்மையை உறுதிப்படுத்தவும் இந்தப் பணப் பரிமாற்றங்கள் அவசியம் என்று அவர்கள் விவசாயியிடம் கூறி பணமோசடி செய்துள்ளனர்.

Advertisement

Advertisement

அதிகாரிகள் போல நடித்த அவர்களை விவசாயியும் நம்பி ரூ. 1.31 கோடியை அனுப்பியுள்ளார்.

அதன்பின்னரே தான் ஏமாற்றப்பட்டது உணர்ந்து, தேசிய சைபர் குற்றத் தடுப்பு உதவி எண்ணான 1930-ஐத் தொடர்புகொண்டு புகார் அளித்தார்.

தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா (BNS) பிரிவுகளின் கீழ் தக்ஷிண கன்னடா சைபர் குற்றப் பிரிவு காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டிஜிட்டல் கைது

இந்த வகை மோசடியில், மோசடிக்காரர்கள் தாங்கள் சட்ட அமலாக்க அல்லது அரசு அதிகாரிகள் என்று கூறி பெரும்பாலும் விடியோ காலில் அழைப்பு மேற்கொண்டு உங்களை ஆன்லைனில் கைது செய்கிறோம் என்று கூறுவார்கள்.

நீங்கள் தீவிரமான குற்றங்களில் ஈடுபட்டதாகப் பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்துவதுடன், இதில் இருந்து தப்பிக்க வேண்டுமென்றால் பணம் தர வேண்டும் என்று மிரட்டி பணம் பறிக்கின்றனர். அதனால் இதுபோன்ற விடியோ அழைப்புகள் வந்தால் யோசிக்காமல் அழைப்பைத் துண்டித்துவிட்டு சைபர் குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவும்.

summary

Cybercriminals Dupe Farmer Of Rs 1.31 Crore In Digital Arrest Fraud

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments