முகப்பு

வாட்ஸ்ஆப் வெப் பயன்படுத்துபவரா நீங்கள்? சைபர் கிரைம் எச்சரிக்கை!

வாட்ஸ்ஆப் வெப் பயன்படுத்துவர்களுக்கு அரசின் சைபர் குற்றத் தடுப்புப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

36 வினாடிகள் முன்பு
வாட்ஸ்ஆப் வெப் பயன்படுத்துபவரா நீங்கள்? சைபர் கிரைம் எச்சரிக்கை!
வாட்ஸ்ஆப் வெப் - படம் / நன்றி - வாட்ஸ்ஆப்
பகிர்:

வாட்ஸ்ஆப் வெப் பயன்படுத்துவர்களுக்கு அரசின் சைபர் குற்றத் தடுப்புப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தகவல் பரிமாற்றத்திற்காக வாட்ஸ்ஆப் செயலி இன்று கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வரும் நிலையில், கணினி அல்லது லேப்டாப்களில் வாட்ஸ்ஆப்பை இணைக்கும் விதமாக பலரும் 'வாட்ஸ்ஆப் வெப்' பயன்படுத்துகிறார்கள்.

வாட்ஸ்ஆப் வெப் பயன்படுத்தும்போது முக்கிய தகவல்களை அதன் மூலமாக பகிர வேண்டாம் என்று அரசின் இணைய குற்றத் தடுப்புப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Advertisement

Advertisement

வாட்ஸ்ஆப் வெப் மூலமாக ஹேக்கர்கள் தகவல்களை எளிதாக எடுக்க முடியும் என்றும் உங்களுடைய வாட்ஸ்ஆப் கணக்கை கைப்பற்றவும் அதனை நிர்வகிக்கவும், உரையாடல்களைப் படிக்கவும் முடியும் என்பதால் கவனமாக இருக்க அறிவுறுத்தியுள்ளது.

உங்களுடைய வாட்ஸ்ஆப் கணக்கில் உள்ள தொடர்புகளை எடுத்து ஆள்மாறாட்ட மோசடியும் நடக்க வாய்ப்புள்ளது.

முக்கியமான ஓடிபி, பாஸ்வேர்டு ஆகியவற்றை வாட்ஸ்ஆப்பில் பகிர்ந்தால் அதை எடுத்து உங்களுடைய வங்கிக் கணக்கில் இருந்து பண மோசடி நடக்கலாம்.

எனவே, பயனர்கள் கணினியில் வாட்ஸ்ஆப் வெப் பயன்படுத்திய பின்னர் முறையாக லாக் - அவுட் செய்ய வேண்டும் என்றுஅறிவுறுத்தப்பட்டுள்ளது.

வாட்ஸ்ஆப் வெப்பைப் பயன்படுத்தும்போது, குறிப்பாக அலுவலகக் கணினிகள், பகிரப்பட்ட கணினிகள், பொதுக் கணினிகள் அல்லது பிறரால் அணுகக்கூடிய சாதனங்களில் எச்சரிக்கையுடன் இருக்குமாறு பயனர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

நிதி, ரகசிய தகவல்களை வாட்ஸ்ஆப் வெப் மூலம் பரிமாறிக்கொள்வதைத் தவிர்ப்பது நல்லது என்றும் பொது இடங்களில் உள்ள கணினிகளில் வாட்ஸ்ஆப் வெப் பயன்படுத்த வேண்டாம் என்றும் கூறியுள்ளது.

summary

Government anti-cybercrime wing has WhatsApp Web warning for you

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.