FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சென்னையில் டிச.17 முதல் 19 வரை இந்திய பிளம்பிங் கருத்தரங்கு

சென்னையில் டிச.17 முதல் 19 வரையில் இந்திய பிளம்பிங் கருத்தரங்கு நடைபெறுவது குறித்து...

19 வினாடிகள் முன்பு
இந்திய பிளம்பிங் கருத்தரங்கு - Indian Plumbing Conference
பகிர்:

சென்னையில் 32-ஆவது இந்திய பிளம்பிங் கருத்தரங்கு வரும் டிச.17- ஆம் தேதி சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெறவுள்ளதாக இந்திய பிளம்பிங் சங்கத்தின் தேசியத் தலைவர்குர்மித் சிங் அரோரா தெரிவித்தார்.

இதுதொடர்பாக சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்தியாவின் கட்டுமானத் துறையைச் சேர்ந்தவர்கள் மற்றும் நீர், பிளம்பிங், சுகாதாரம் மற்றும் உட்கட்டமைப்புத் துறைகளின் முன்னணி நிபுணர்கள் பங்கேற்கும் 32-ஆவது இந்திய பிளம்பிங் கருத்தரங்கு வரும் டிச. 17 முதல் 19 வரை சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற உள்ளது.

Advertisement

Advertisement

இதில் 100 -க்கு மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் பங்கேற்கும் கண்காட்சியும் நடைபெறுகிறது. இதில் நவீன தயாரிப்புகள், மேம்பட்ட தொழில்நுட்பங்கள் மற்றும் அதிநவீன தீர்வுகள் காட்சிப்படுத்தப்பட உள்ளன.

இத்துறை சார்ந்த அதிநவீன மற்றும் நிலையான தீர்வுகளை முன்னிலைப்படுத்துவதோடு, தொழில்ரீதியான கூட்டு முயற்சிகள், தொடர்புகள் மற்றும் வணிக வாய்ப்புகளை மேம்படுத்துவதாகவும் இக்கருத்தரங்கு அமையும்.

இந்த மூன்று நாள் கண்காட்சியைப் பார்வையிட அனுமதி இலவசம். மாநாட்டில் பங்கேற்க விரும்பும் பிரதிநிதிகள் www.indianplumbingconference.com என்ற இணையதளத்தில் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றார் அவர்

summary

Indian Plumbing Conference in Chennai on Dec. 17

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.