வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் உலகத் தலைமைத்துவத்தை நோக்கி இந்தியா: பிரதமர் மோடி
அதிகரித்து வரும் எரிசக்தி தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, நாடு தனது அணுசக்தி திறனை விரிவுபடுத்தி வருவது குறித்து...
பெங்களூரு: சிப்கள் முதல் கப்பல்கள் வரையிலும், செய்யறிவு மற்றும் தரவு மையங்கள் முதல் குவாண்டம் கம்ப்யூட்டிங் வரையிலும், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் உலகத் தலைமைத்துவத்தை நோக்கி இந்தியா நகர்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். இந்த இலக்கை அடைவதற்கு நம்பகமான மின் உற்பத்தி அவசியம் என்று அவர் வலியுறுத்தினார். தூய்மையான எரிசக்தி இலக்குகளை அடைவதற்கும், அதிகரித்து வரும் எரிசக்தி தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, நாடு தனது அணுசக்தி திறனை விரிவுபடுத்தி வருவதாக மோடி தெரிவித்தார்.
பெங்களூரு இந்திய மேலாண்மை மையத்தில் (ஐஐஎம்) நடந்த விழாவில் கா்நாடகத்தில் ரூ.15,600 கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டங்களை தொடங்கி வைத்தும், நாட்டுக்கு அா்ப்பணித்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் பிரதமா் மோடி பேசினார்.
Advertisement
Advertisement
அப்போது, மெட்ரோ, ரயில்வே மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய இந்தத் திட்டங்கள், இணைப்பை வலுப்படுத்தும், பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் மற்றும் மாநிலத்தில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.
ஈரான் மற்றும் வளைகுடா பிராந்தியத்தை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வரும் மோதல்களுக்கு இடையே நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்துவது அவசியத்தை பிரதமர் மோடி எடுத்துரைத்தார். கடந்த பத்தாண்டுகளில் எரிபொருள் உற்பத்தி மற்றும் சேமிப்புத் திறனை விரிவுபடுத்துவதன் மூலமும், சூரியசக்தி, நீா்மின்சாரம், காற்றாலை மின்சார உற்பத்தியில் முதலீடுகள் செய்வதன் மூலமும் நாடி தனது எரிசக்தி உள்கட்டமைப்பை வலுப்படுத்தியுள்ளது. நாட்டின் இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன் 300 ஜிகாவாட்டைத் தாண்டியுள்ளது என்றும் அவர் கூறினார்.
பிரதமரின் சூரியசக்தி இலவச மின்சார திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் 60 லட்சத்துக்கும் அதிகமான வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின் உற்பத்தி அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன. கா்நாடகத்தில் மட்டும் 40,000-க்கும் அதிகமான வீடுகளில் இவை அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குடும்பத்துக்கும் சுமாா் ரூ.80,000 நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. பிரதமரின் குசும் திட்டத்தின்கீழ் கா்நாடகத்தில் எட்டு லட்சத்துக்கும் அதிகமான சூரியசக்தி பம்புகள் பாசனத்துக்குப் பயன்படுத்தப்படுகின்றன. இந்தத் திட்டங்கள், வீடுகளையும் விவசாயிகளையும் தூய்மையான எரிசக்தி உற்பத்தியாளர்களாக மாற உதவுவதாகவும் அவர் கூறினார்.
பெட்ரோலியப் பொருள்கள் மற்றும் சமையல் எரிவாயு உற்பத்தி திறன் அதிகரிக்கப்பட்டுள்ளதோடு, கச்சா எண்ணெய் சேமிப்பு வசதிகளும் உருவாக்கப்பட்டுள்ளன. சூரியசக்தி, நீா்மின்சாரம், காற்றாலை மின்சார உற்பத்தியும் விரிவுபடுத்தப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி பேசிய பிரதமர் மோடி, மங்களூரில் அமைக்கப்பட்டுள்ள நிலத்தடி சமையல் எரிவாயு சேமிப்புக் கிடங்கு 80,000 மெட்ரிக் டன் சேமிப்பு கொள்ளளவு கொண்டது.
பெட்ரோல், டீசல் மற்றும் விமான எரிபொருள் விநியோகத்தைச் சீரமைப்பதை நோக்கமாகக் கொண்ட தேவாங்கந்தி சந்தைப்படுத்தல் முனையம்; மற்றும் பெங்களூருவில் ஒரு நாளைக்கு 13 டன் உற்பத்தித் திறன் கொண்ட அழுத்தப்பட்ட உயிரிவாயு ஆலை ஆகியவை அடங்கும். இந்த உயிரிவாயு ஆலை, கழிவு மேலாண்மையை மேம்படுத்தி, இயற்கை எரிவாயு இறக்குமதிக்கான செலவினங்களைக் குறைக்க உதவும் என்று மோடி கூறினார்.
பெங்களூரு அருகே உள்ள தேவனகொண்டி எரிபொருள் விநியோக முனையம் மூலம் பெட்ரோல், டீசல், விமான எரிபொருள் விநியோகம் மேம்படும். பெங்களூரில் அமைக்கப்படும் அழுத்தப்பட்ட உயிரிவாயு ஆலை நாளொன்றுக்கு சுமாா் 13 டன் உயிரிவாயுவை உற்பத்தி செய்யும். இதனால் கழிவு மேலாண்மை மேம்படுவதுடன், இயற்கை எரிவாயு இறக்குமதிச் செலவும் குறையும்.
பெங்களூருவை நாட்டின் சிலிக்கான் பள்ளத்தாக்கு என்று வர்ணித்த பிரதமர் மோடி, அந்நகரம் நாட்டின் தகவல் தொழில்நுட்ப ஏற்றுமதியில் மூன்றில் ஒரு பங்கிற்கும் மேலாகப் பங்களிப்பதாகவும், புத்தாக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய மையமாகத் திகழ்வதாகவும் கூறினார்.
2014-ஆம் ஆண்டில் வெறும் 17 கிலோமீட்டராக இருந்த 'நம்ம மெட்ரோ' வலையமைப்பு, தற்போது 100 கிலோமீட்டருக்கும் மேலாக விரிவடைந்துள்ளது. இதன் மூலம், தில்லி-என்சிஆர் மற்றும் மும்பை பெருநகரப் பகுதித் தொடா்ந்து, இந்த மைல்கல்லை எட்டிய நாட்டின் மூன்றாவது நகரமாக பெங்களூரு உருவெடுத்துள்ளது. பெங்களூரு மெட்ரோவின் புதிதாகத் தொடங்கி வைக்கப்பட்டுள்ள 'இளஞ்சிவப்புநிற' (பிங்க் லைன்) உயா்மட்டப் பாதை தொடங்கப்பட்டுள்ளதன் மூலம் இந்திய மேலாண்மை மையம்(ஐஐஎம்) உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கும், முக்கிய வணிக மற்றும் தொழில்நுட்ப மையங்களுக்கும் இடையிலான போக்குவரத்து வசதி(இணைப்பு) மேம்படும். தில்லி தேசிய தலைநகா் பிராந்தியம், மும்பை பெருநகரப் பகுதியைத் தொடா்ந்து 100 கி.மீ.க்கும் அதிகமான மெட்ரோ வழித்தடத்தை கொண்ட மூன்றாவது நகரப் பகுதியாக பெங்களூரு உருவெடுத்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.
மேலும், 'அம்ருத் பாரத்' ரயில் நிலையங்களின் மேம்பாடு மற்றும் 'வந்தே பாரத்' சேவைகளின் விரிவாக்கம் உள்ளிட்ட ரயில்வே நவீனமயமாக்கல் பணிகள் குறித்து பேசிய மோடி, கர்நாடகாவையும் கோவாவையும் இணைக்கும் புதிய வந்தே பாரத் ரயிலையும் அவர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்த புதிய சேவை மூலம் பெங்களூரு, கடலோர கா்நாடகம், மங்களூரு, கோவா இடையே கடலோரப் பகுதிகளில் போக்குவரத்து இணைப்பை மேம்படுத்துவதுடன், பயணிகளுக்கு வேகமான மற்றும் வசதியான பயண அனுபவத்தை வழங்கும். புத்தாக்கம் மற்றும் பொருளாதார வளா்ச்சியின் முக்கிய மையமாக விளங்கும் பெங்களூரு பகுதியில் நவீன பொதுப் போக்குவரத்து உள்கட்டமைப்பை விரிவுபடுத்த மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது என்றார்.