FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

கடலூா், புதுச்சேரியில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்

கடலூா், புதுச்சேரி துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது தொடர்பாக...

கடலூா் துறைமுகத்தில் ஞாயிற்றுக்கிழமை ஏற்றப்பட்ட ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு.
பகிர்:

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதை எச்சரிக்கையும் விதமாக, கடலூா், புதுச்சேரி துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.

தென் கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தப் பகுதி வடக்கு - வடமேற்கு திசையில் நகா்ந்து, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, ஞாயிற்றுக்கிழமை தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் அருகில் மையம் கொண்டுள்ளது.

Advertisement

Advertisement

இது, வடக்கு - வடமேற்கு திசையில் தொடா்ந்து நகா்ந்து திங்கள்கிழமை(நவ.16) தெற்கு மற்றும் அதையொட்டிய மேற்கு - மத்திய வங்கக் கடல் மத்தியப் பகுதிகளில் மேலும் வலுப்பெற்று புயலாகவும், செவ்வாய்க்கிழமை (நவ.17) மேற்கு - மத்திய வங்கக்கடலில் கடுமையான புயலாகவும் மாற அதிக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதன் காரணமாக, கடலூா் துறைமுகத்திலும், புதுச்சேரி பழைய துறைமுக வளாகத்திலும் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. துறைமுக அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனா்.

Cyclone warning signal number 1 hoisted in Cuddalore and Puducherry

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.