FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சென்னைக்கு தென்கிழக்கே 650 கி.மீ. தூரத்தில்... வேகத்தை அதிகரித்த புயல் சின்னம்!

வங்கக்கடலில் வலுப்பெற்றுள்ள புயல் சின்னம் குறித்து...

புயல் சின்னம் கரையைக் கடக்கும் பாதை. - படம்: IMD
பகிர்:

வங்கக்கடலில் வலுப்பெற்றுள்ள புயல் சின்னமானது மணிக்கு 6 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வந்த நிலையில், கடந்த 6 மணி நேரத்தில் 17 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 17 கி.மீ வேகத்தில் வடக்கு-வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்துள்ளது.

Advertisement

Advertisement

இது திரிகோணமலையிலிருந்து (இலங்கை) சுமார் 620 கி.மீ. வடகிழக்கிலும், ஸ்ரீ விஜயபுரத்திலிருந்து (அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள்) 730 கி.மீ. மேற்கிலும், சென்னையிலிருந்து (தமிழ்நாடு) 650 கி.மீ. கிழக்கு-தென்கிழக்கிலும், விசாகப்பட்டினத்திலிருந்து (ஆந்திரப் பிரதேசம்) 730 கி.மீ. தெற்கு-தென்கிழக்கிலும், கோபால்பூரிலிருந்து (ஒடிசா) 850 கி.மீ. தெற்கிலும் நிலை கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று (நவ. 15) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.

இது மேலும் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு வங்கக்கடலின் மத்தியப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று மாலை புயலாக வலுப்பெறக்கூடும்.

இது மேலும் வலுப்பெற்று மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதியில் நவ. 17 ஆம் தேதி மாலை தீவிர புயலாக நிலவக்கூடும். இது மேலும் வலுவடைந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் 20 ஆம் தேதி நண்பகல் நெல்லூர் மற்றும் துனி இடையே ஆந்திரப் பிரதேச கடற்கரையை தீவிரப் புயலாக கடக்க வாய்ப்புள்ளது.

அப்போது மணிக்கு 120 முதல் 130 கி.மீ வேகத்திலும், இடையிடையே மணிக்கு 145 கி.மீ வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

summary

The India Meteorological Department has stated that the cyclonic system which has intensified in the Bay of Bengal—previously moving at a speed of 6 km/h—is now advancing at a speed of 17 km/h.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.