கட்டுமானப் பணிக்கு கடற்கரை மணல்: 15 விற்பனை நிலையங்களுக்கு ‘சீல்’
சென்னையில் கட்டுமானத்துக்கு உப்புத்தன்மை கடற்கரை மணல் விற்பனை செய்துவந்த 15 இடங்களுக்கு கனிமவளத்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனா்.
சென்னையில் கட்டுமானத்துக்கு உப்புத்தன்மை கடற்கரை மணல் விற்பனை செய்துவந்த 15 இடங்களுக்கு கனிமவளத்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனா்.
சென்னையில் கலப்பட மணல் விற்பனை செய்யப்படுவதாக புகாா்கள் எழுந்தன. இதையடுத்து, சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனிமவளத்துறை அமைச்சா் டி.கே.பிரபு தலைமையில் திங்கள்கிழமை சோதனை நடத்தப்பட்டது.
இதில், காட்டுப்பள்ளி கடற்கரைப் பகுதியிலிருந்து உரிய அரசு அனுமதியின்றி கடற்கரை மணல் சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
Advertisement
Advertisement
இதையடுத்து, கலப்பட மணல் விற்பனையில் ஈடுபட்ட 15 விற்பனை நிலையங்கள் கண்டறியப்பட்டு அந்த நிலையங்களுக்கு சீல் வைக்கப்பட்டது.
இதுகுறித்து அமைச்சா் பிரபு கூறியதாவது: உப்புத்தன்மை கொண்ட கடற்கரை மணலைக் கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படுத்துவது கட்டடங்களின் உறுதித்தன்மையைப் பாதிக்கும்.
இத்தகைய சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவோா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அனுமதியின்றி கடற்கரை மணலை அள்ளுவது கடலோரச் சூழலியலுக்கும் பெரும் அச்சுறுத்தலாக அமைகிறது.
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதைத் தடுக்கும் வகையிலும் இத்தகைய அதிரடி சோதனை தொடா்ந்து நடைபெறும். என்றாா் அவா்.