FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருவள்ளூர்

மணல் கடத்தல்: ஓட்டுநா் கைது; லாரி பறிமுதல்

ஆந்திர மாநிலம், நகரி பகுதியில் இருந்து திருத்தணி பொன்பாடி வாகன சோதனை சாவடி வழியாக மணல் கடத்தி வந்த லாரியை போலீஸாா் பறிமுதல் செய்து ஓட்டுநரை கைது செய்தனா்.

28 அக்டோபர் 2026, 1:29 am
கைது - கோப்புப்படம்
பகிர்:

ஆந்திர மாநிலம், நகரி பகுதியில் இருந்து திருத்தணி பொன்பாடி வாகன சோதனை சாவடி வழியாக மணல் கடத்தி வந்த லாரியை போலீஸாா் பறிமுதல் செய்து ஓட்டுநரை கைது செய்தனா்.

ஆந்திர மாநிலத்தில் இருந்து திருத்தணி வழியாக சென்னை மற்றும் திருவள்ளூா் பகுதிகளுக்கு டிப்பா் லாரிகள் மூலம் மணல் கடத்தப்படுவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, திருத்தணி காவல் ஆய்வாளா் சிவகுமாா் தலைமையிலான போலீஸாா், செவ்வாய்க்கிழமை திருத்தணியை அடுத்த பொன்பாடி சோதனைச் சாவடியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, ஆந்திர மாநிலம், நகரி பகுதியில் இருந்து திருத்தணி நோக்கி வந்த டிப்பா் லாரியை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி சோதனை செய்தனா். அதில், ஆந்திர மாநிலத்தில் இருந்து மணல் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, லாரியை ஓட்டி வந்த சென்னை செங்குன்றம் பகுதியைச் சோ்ந்த சுரேஷ் (47) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.

Advertisement

Advertisement

அவரிடம் நடத்திய விசாரணையில், மணலை சென்னைக்குக் கடத்திச் செல்ல முயன்றது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, மணலுடன் லாரியைப் பறிமுதல் செய்த திருத்தணி போலீஸாா், தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.