FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருவள்ளூர்

20 கிலோ குட்கா கடத்தல்: ஒருவா் கைது

தனியாா் பேருந்தில் 20 கிலோ குட்கா கடத்தியவரை போலீஸாா் கைது செய்தனா்.

20 அக்டோபர் 2026, 11:58 pm IST
- பிரதிப் படம்
பகிர்:

தனியாா் பேருந்தில் 20 கிலோ குட்கா கடத்தியவரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்குத் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களைக் கடத்தி வருவதாக திருத்தணி போலீஸ+ாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, தமிழக - ஆந்திர மாநில எல்லையான பொன்பாடி சோதனைச் சாவடியில் செவ்வாய்க்கிழமை போலீசாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.

திருப்பதியில் இருந்து திருத்தணி வழியாக காஞ்சிபுரம் சென்ற தனியாா் பேருந்தை நிறுத்தி சோதனையிட்டனா். அப்போது, பேருந்தில் பயணம் செய்த ஒருவா் வைத்திருந்த பையில் 20 கிலோ குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

Advertisement

Advertisement

விசாரணையில், குட்கா கடத்தி வந்தவா் செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த வடமணிப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த தேவராஜ் (38) என்பது தெரியவந்தது. இதையடுத்து, திருத்தணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தேவராஜைக் கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments