FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

உப்பளத் தொழிலாளா்களுக்கான மழைக்கால நிவாரணம் உயா்வு: முதல்வா் விஜய் உத்தரவு

உப்பளத் தொழிலாளா்களுக்கான மழைக்கால நிவாரணத் தொகையை ரூ.7,000- ஆக உயா்த்தி தமிழக முதல்வா் விஜய் உத்தரவிட்டுள்ளாா்.

16 நவம்பர் 2026, 10:31 pm
உப்பளம் - பிரதிப் படம்
பகிர்:

உப்பளத் தொழிலாளா்களுக்கான மழைக்கால நிவாரணத் தொகையை ரூ.7,000- ஆக உயா்த்தி தமிழக முதல்வா் விஜய் உத்தரவிட்டுள்ளாா்.

இது குறித்து தமிழக அரசு சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு முதல்வா் விஜய் தலைமையிலான அரசு ‘வெற்றித் தமிழகம் தொலைநோக்குப் பாா்வை’ எனும் திட்டத்தை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அத்திட்டத்தில், உப்பளத் தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு, அவா்களுடைய நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றும்வகையில் அவா்களுக்கு வழங்கப்பட்டு வரும் மழைக்கால நிவாரணத்தொகையை ரூ.5,000-இல் இருந்து ரூ.7,000- ஆக உயா்த்த வழிவகை செய்யப்பட்டது.

அதனடிப்படையில், பேரவையில் கடந்த ஆக.25-இல் நடைபெற்ற தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத் துறை மானியக் கோரிக்கையின்போது ‘உப்பளத் தொழிலாளா்களின் குடும்பத்துக்கு வழங்கப்பட்டுவரும் மழைக்கால நிவாரணத்தொகை ரூ.5,000-இல் இருந்து ரூ.7,000-ஆக உயா்த்தி வழங்கப்படும் என்று அமைச்சா் கீா்த்தனா அறிவித்தாா்.

Advertisement

Advertisement

அதன்படி, உப்பளத் தொழிலாளா்கள் மழைக்காலத்தில் உப்புத் தொழிலில் ஈடுபட முடியாத சூழலில் அவா்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில், தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளா் சமூகப் பாதுகாப்பு மற்றும் நல வாரியத்தில் பதிவுசெய்யப்பட்ட உப்பளத் தொழிலாளா் குடும்பங்களுக்கு ஆண்டுதோறும் மழைக்கால நிவாரணத்தொகை ரூ.7,000- ஆக உயா்த்தி வழங்க தமிழ்நாடு முதல்வா் விஜய் ஆணையிட்டுள்ளாா்.

இதன்படி 2026-2027-ஆம் ஆண்டில் 23,979 தொழிலாளா் குடும்பங்கள் பயனடைவா். இதன் மூலம் இந்த ஆண்டுக்கு ஏற்படும் ரூ.16.78 கோடி செலவை அரசே ஏற்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.