FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

வீடுகளில் சூரிய மின்சாரத் தகடுகள் அமைக்கும் திட்டம்: ஒரு மாதத்தில் 35,000 விண்ணப்பம்!

கடந்த 1 மாதத்தில் மட்டும் சுமார் 35000 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக அமைச்சர் தகவல்.

12 வினாடிகள் முன்பு
சூரிய ஒளி தகடுகள் - கோப்புப் படம்
பகிர்:

வீடுகளில் சூரிய மின்சாரத் தகடுகள் அமைக்கும் திட்டத்துக்கு கடந்த ஒரு மாதத்தில் 35,000 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக மின்சாரத் துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மின்சாரத் துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

Advertisement

Advertisement

”வீடுகளில் சூரிய மின்சாரத் தகடுகள் அமைக்கும் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஏப்ரல் 2026 வரை தமிழகத்தில் சுமார் 87 ஆயிரம் வீடுகளில் மட்டுமே சூரிய ஒளி மின் தகடுகள் இருந்து வந்த நிலையில், நமது முதல்வர் இந்தத் திட்டத்தை ஊக்குவிக்க கூடுதல் மானியத்தை அறிவித்தார்.

இந்தத் திட்டத்தை மக்கள் எளிதாகப் பயன்பெற மற்றும் எளிதாக விண்ணப்பிக்க tnebltd.gov.in/usrp/ என்ற ஒருங்கிணைந்த போர்டலை உருவாக்கி அதன்மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.

கடந்த 1 மாதத்தில் மட்டும் சுமார் 35,000 விண்ணப்பங்கள் பெறப்பட்டு நடவடிக்கையில் உள்ளன என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

மார்ச் 2027-க்குள் 1 லட்சம் வீடுகளில் சூரிய மின்சாரத் தகடுகள் அமைப்பது என்பதே நமது இலக்கு” என்று குறிப்பிட்டுள்ளார்.

summary

Electricity Minister CTR Nirmal Kumar has stated that 35,000 applications have been received over the past month for the scheme to install solar power panels in homes.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.