சின்னசேலத்தில் பரபரப்பு: ஏரியில் 3 சிறுவர்கள் சடலமாக மீட்பு
சின்னசேலம் பகுதியில் காணாமல் போன 3 சிறுவர்கள் ஏரியில் சடலமாக மீட்கப்பட்டது குறித்து...
கள்ளக்குறிச்சி: சின்னசேலம் பகுதியில் காணாமல் போன 3 சிறுவர்கள் ஏரியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து - போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியில் வசித்து வரும் தங்கமணி என்பவரது மகன் இமானுவேல் மற்றும் ஷாம் ஆபிரகாம் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ராஜா ஆகிய மூன்று சிறுவர்களும் ஞாயிற்றுக்கிழமை தோட்டப்பாடி கிராமத்தில் உள்ள ஏரியில் மீன்பிடிப்பதற்காக சென்றுள்ளனர். இரவு ஆகியும் அவர்கள் மூவரும் வீடு திரும்பாத நிலையில் அவரது பெற்றோர்கள் சின்னசேலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்
Advertisement
Advertisement
இந்த நிலையில், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து சின்னசேலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், தற்போது சின்னசேலம் காவல் நிலையத்திற்கு உள்பட்ட தோட்டப்பாடி கிராமத்தில் அமைந்துள்ள சிறிய ஏரியில் உள்ள குட்டையில் மூன்று சிறுவர்களும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சின்னசேலம் தீயணைப்பு மற்றும் காவல் துறையினர் உயிரிழந்த மூன்று சிறுவர்களின் உடலையும் மீட்டு உடல்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.