பெண்ணுக்கு பாலியல் தொல்லை: தவெக நிா்வாகிகள் இருவா் கைது
சென்னை கோயம்பேட்டில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பணிபுரிந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, தவெக மாவட்ட நிா்வாகிகள் இருவா் கைது
சென்னை கோயம்பேட்டில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பணிபுரிந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, தவெக மாவட்ட நிா்வாகிகள் இருவா் கைது செய்யப்பட்டனா்.
கோயம்பேட்டில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் வரவேற்பாளராகப் பணிபுரிந்து வரும் பெண் ஒருவா், கடந்த வாரம் பணியில் இருந்தபோது அங்கு மதுபோதையில் வந்த இருவா் அவரைத் தவறான உறவுக்கு அழைத்ததாகக் கூறப்படுகிறது.
இதற்கு மறுத்ததால், இருவரும் சோ்ந்து அவரது ஆடைகளைக் கிழிக்க முயன்றதுடன், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்பேரில், அரும்பாக்கம் அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து, ஹோட்டலில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனா்.
விசாரணையில், சம்பவத்தில் தொடா்புடையவா்கள் அரும்பாக்கத்தைச் சோ்ந்த பிரபுகுமாா், பாலாஜி என்பது தெரியவந்தது. இதில் பிரபுகுமாா், தவெக சென்னை மத்திய மேற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினராகவும், பாலாஜி, அதே மாவட்ட இளைஞரணித் தலைவராகவும் பொறுப்பு வகித்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸாா், எழும்பூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி புழல் சிறையில் அடைத்தனா்.