புழல் சிறையில் அன்பில் மகேஸை மீண்டும் சந்தித்தார் உதயநிதி ஸ்டாலின்!
புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அன்பில் மகேஸ் பொய்யாமொழியை, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீண்டும் சந்தித்திருப்பது பற்றி...
புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியை, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் 3-வது முறையாக இன்று சந்தித்தார்.
தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறிப் பண மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement
Advertisement
இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், நீதிமன்ற உத்தரவின்பேரில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், புழல் சிறையில் உள்ள அவரை எதிர்க்கட்சித் தலைவரான உதயநிதி ஸ்டாலின் மூன்றாவது முறையாக இன்று நேரில் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின்போது முன்னாள் அமைச்சர் சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு ஆகியோரும் உடனிருந்தனர்.
ஏற்கெனவே இருமுறை சிறையில் சந்தித்துப் பேசியிருந்த நிலையில், தற்போது மூன்றாவது முறையாக உதயநிதி ஸ்டாலின் சந்தித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.
மேலும், கடந்த வாரம் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தாக்கல் செய்த ஜாமீன் மனுவைச் சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.