FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

கோமாளி அரசின் தோல்விகளை மறைக்க கைது நடவடிக்கை: உதயநிதி கண்டனம்

முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கைது செய்யப்பட்டதற்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் - கோப்புப்படம்
பகிர்:

முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கைது செய்யப்பட்டதற்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திமுக ஆட்சியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக இருந்தபோது, தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதற்காக ரூ. 100 கோடிக்கு மேல் லஞ்சம் பெற்றதாக அன்பில் மகேஸ் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி அன்பில் மகேஸ் தொடர்ந்த மனுவை உயர் நீதிமன்ற நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து சென்னை அமைந்தகரையில் உள்ள இல்லத்தில் அன்பில் மகேஸை காவல் துறையினர் இன்று மாலை கைது செய்தனர்.

Advertisement

Advertisement

சென்னை வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த கைது நடவடிக்கைக்கு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரான உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அவரது சமூக ஊடகப் பதிவில், “அரசியல் பழிவாங்கும் நோக்கோடு முன்னாள் அமைச்சர் சகோதரர் அன்பில் மகேஸ் அவர்களை கைது செய்துள்ள இந்த சர்க்கஸ் ஆட்சியாளர்களை வன்மையாக கண்டிக்கிறேன்.

திரும்பிய திசையெல்லாம் தறிகெட்டு போயிருக்கும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் - விலைவாசி உயர்வு - த.வெ.க.வினரின் அட்டூழியங்கள் என இந்த கோமாளி அரசின் தோல்விகளை மறைக்கவும் - திசைத்திருப்பவுமே இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறார் டம்மி சிஎம்.

சகோதரர் அன்பில் மகேஸ் இந்தச்சூழலை சட்டப்படி எதிர்கொண்டு மீண்டு வருவார். வழக்கினாலும் - கைது நடவடிக்கைளாலும் கழக உடன்பிறப்புகளை ஒரு போதும் அடக்க முடியாது.

summary

Arrests made to cover up the failures of a 'clownish' government: Udhayanidhi condemns the move

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments