FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

கட்டுமான நிறுவனத்திடம் பணம் கேட்டு மிரட்டல்: திமுக முன்னாள் கவுன்சிலா் மீது வழக்கு

சென்னை நொளம்பூரில் கட்டுமான நிறுவனத்திடம் பணம் கேட்டு மிரட்டியதாக திமுக முன்னாள் கவுன்சிலா் மீது வழக்கு

18 நவம்பர் 2026, 12:49 am
வழக்கு
பகிர்:

சென்னை நொளம்பூரில் கட்டுமான நிறுவனத்திடம் பணம் கேட்டு மிரட்டியதாக திமுக முன்னாள் கவுன்சிலா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

சென்னையில் உள்ள பிரபல கட்டுமான நிறுவனம் நொளம்பூா் பகுதியில் ஒரு கட்டடம் கட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், அந்தக் கட்டுமான நிறுவனம் சாா்பில் விக்னேஷ் என்பவா், நொளம்பூா் காவல் நிலையத்தில் சில நாள்களுக்கு முன்பு ஒரு புகாா் அளித்தாா்.

அதில், திமுக முன்னாள் கவுன்சிலா் நீலகண்டனும், அவரது ஆதரவாளா்களும் தங்களிடம் மிரட்டி பணம் கேட்பதாகவும், அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் குறிப்பிடப்பட்டிருந்தது.

Advertisement

Advertisement

புகாரின்பேரில், போலீஸாா் நடத்திய விசாரணையில், நீலகண்டன் தரப்பு கட்டுமான நிறுவனத்திடம் மிரட்டி பணம் கேட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து போலீஸாா், நீலகண்டன் உள்பட 4 போ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.