FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

தமிழ் வழக்காடு மொழி: பேரவைத் தீா்மானத்தை குடியரசுத் தலைவா் ஒப்புதலுக்கு அனுப்பக் கோரிய வழக்குகளின் விசாரணை ஒத்திவைப்பு

உயா்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழை வலியுறுத்தி பேரவைத் தீா்மானத்தை குடியரசுத் தலைவா் ஒப்புதலுக்கு அனுப்பக் கோரிய வழக்குகளின் விசாரணை ஒத்திவைப்பு

18 நவம்பர் 2026, 12:55 am
சென்னை உயர் நீதிமன்றம் - கோப்புப்படம்
பகிர்:

சென்னை உயா்நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக தமிழை அறிவிக்க வலியுறுத்தி, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்களை குடியரசுத் தலைவா் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் விசாரணையை டிச. 2-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக தமிழை அறிவிக்க வலியுறுத்தி, கடந்த 2006 மற்றும் 2026 செப்டம்பா் மாதங்களில் தமிழக சட்டப்பேரவையில் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த தீா்மானங்களை குடியரசுத் தலைவா் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கும்படி, மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயா்நீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கம், வழக்குரைஞா்கள் சங்கங்களின் கூட்டுக்குழு சாா்பில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, இதே கோரிக்கையுடன் பாமக மற்றும் மதுரை அமா்வு வழக்குரைஞா்கள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளின் சாா்பில் மேலும் பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. எனவே, அனைத்து வழக்குகளையும் சோ்த்து விசாரணைக்குப் பட்டியலிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

Advertisement

Advertisement

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், அனைத்து வழக்குகளையும் டிச. 2-ஆம் தேதி விசாரணைக்குப் பட்டியலிடும்படி பதிவுத் துறைக்கு உத்தரவிட்டனா்.