சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (நவ.17) எந்தெந்த வழக்குகள் விசாரணை?
சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (நவ. 17) விசாரணைக்கு வரவுள்ள வழக்குகள் குறித்து...
சென்னை: தனியார் பள்ளிகளிடம் லஞ்சம் பெற்ற வழக்கில் கைதான திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் ஜாமீன் கேட்டு மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவுள்ளது.
இன்று விசாரணைக்கு வரவுள்ள முக்கிய வழக்குகள்
Advertisement
Advertisement
வெளிநாடு செல்லவிருந்த தன்னை விமானத்தில் இருந்து இறக்கிவிட்டதுடன், சிறப்பு புலனாய்வுக் குழு அலுவலகத்தில் தனக்கு இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்கக் கோரி வீரமணியின் மகள் அர்ச்சனா தாக்கல் செய்த வழக்கு
சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக தமிழை அறிவிக்கக் கோரும் சட்டப்பேரவைத் தீர்மானத்தை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி வழக்குரைஞர்கள் சங்கம் தொடர்ந்த வழக்கு
டாஸ்மாக் மதுபான கடைகளில், மதுபானங்களுக்கு 10 ரூபாய் விலை உயர்வு அறிவித்துள்ளதை எதிர்த்து, கிளப்கள், நட்சத்திர விடுதிகள் சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு
கனிம வளங்களை பிற மாநிலங்களுக்கு சட்டவிரோதமாக கொண்டுசெல்வதை எதிர்த்து தொடரப்பட வழக்கு