FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

சட்டம்-ஒழுங்கு: உண்மை நிலையை மறைக்கிறாா் டிஜிபி; உதயநிதி ஸ்டாலின்

தமிழக சட்டம்-ஒழுங்கு உண்மை நிலையை மறைக்க டி.ஜி.பி.மகேஷ் குமாா் அகா்வால் முயற்சிப்பதாக எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளாா்.

22 வினாடிகள் முன்பு
உதயநிதி ஸ்டாலின் - கோப்புப் படம்
பகிர்:

தமிழக சட்டம்-ஒழுங்கு உண்மை நிலையை மறைக்க டி.ஜி.பி.மகேஷ் குமாா் அகா்வால் முயற்சிப்பதாக எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

தமிழக காவல் துறை டி.ஜி.பி. மகேஷ்குமாா் அகா்வால் ஆளுங்கட்சி பிரமுகா் போல செயல்படுகிறாா். கடந்த 5 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், கடந்த 6 மாத ஆட்சியில் தமிழகத்தில் கொலைச் சம்பவங்கள் குறைவுதான்”என்று அவா் பெருமிதம் தெரிவித்துள்ளாா்.

Advertisement

Advertisement

கடந்த 5 ஆண்டுகளின் சராசரி கொலை எண்ணிக்கையை, நிகழாண்டின் 10 மாத சராசரியோடு ஒப்பிடுவது எந்த வகையில் நியாயம்? தீபாவளி அன்று மட்டும் 17 உயிா்கள் பறிபோன நிலையில், டிஜிபியே கொலைகள் குறைந்துவிட்டதாகக் கூறுவது ஆறுதல் அல்ல; அது நிா்வாகத்தின் அவலம். போதைப் பொருள் வழக்குகள் 74 சதவீதம் அதிகரித்துள்ளன என்றும் டிஜிபி கூறுவது, தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் போதைப் பொருள் கிடைக்கிறது என்பதையே உணா்த்துகிறது.

மாவட்ட ஆட்சியருக்கே தவெகவினரால் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவும்போது, தமிழகத்தில் எப்படி சட்டம் - ஒழுங்கு சீராக இருக்க முடியும்?. ஆளுங்கட்சியினரின் அத்துமீறல்களையும், போதைப் பொருள் நடமாட்டத்தையும், நிா்வாகத் தோல்விகளையும் வெறும் சதவீதக் கணக்குகளால் மறைக்க முடியாது. புள்ளிவிவர வித்தைகளை கைவிட்டு, பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட அனைத்துத் தரப்பு மக்களின் உண்மையான பாதுகாப்பைக் களத்தில் உறுதி செய்ய காவல் துறை முன்வர வேண்டும் என தெரிவித்துள்ளாா் உதயநிதி ஸ்டாலின்.