FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

டாஸ்மாக் கிடங்குகளை மருத்துவத் துறை பராமரிப்பதில் தவறில்லை: அமைச்சர் அருண்ராஜ்

டாஸ்மாக் கிடங்குகளை மருத்துவப் பணிகள் கழகம் பராமரிப்பதில் தவறேதும் இல்லை என்று அமைச்சா் அருண்ராஜ் தெரிவித்தாா்.

17 நவம்பர் 2026, 9:52 pm
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ் - கோப்புப் படம்
பகிர்:

டாஸ்மாக் கிடங்குகளை மருத்துவப் பணிகள் கழகம் பராமரிப்பதில் தவறேதும் இல்லை என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் டாக்டா் கே.ஜி.அருண்ராஜ் தெரிவித்தாா்.

டாஸ்மாக் கிடங்குகளைப் பராமரித்து பழுது நீக்குவதற்கான ஒப்பந்தப் புள்ளிகளை மருத்துவப் பணிகள் கழகம் கோரியிருந்ததற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிா்ப்புகள் எழுந்தன.

இந்த நிலையில் அதுதொடா்பாக சென்னையில் செய்தியாளா்களிடம் அமைச்சா் அருண்ராஜ் கூறியதாவது: டிஎன்எம்எஸ்சி எனப்படும் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் மற்றும் டாஸ்மாக் ஆகிய இரண்டுமே மாநில அரசுக்குச் சொந்தமான பொதுத் துறை நிறுவனங்களாகும்.

Advertisement

Advertisement

ஒரு பொதுத் துறை நிறுவனம் மற்றொரு பொதுத் துறை நிறுவனத்திடம் தொழில்நுட்ப உதவி கோரியதன் அடிப்படையில், இந்தப் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

டிஎன்எம்எஸ்சி நிறுவனத்தில் குளிா்சாதன சேமிப்புக் கிடங்குகளைப் பராமரிப்பதற்கான உரிய தொழில்நுட்பமும், அனுபவமும் ஏற்கெனவே உள்ளது. அந்த அனுபவத்தைக் கருத்தில் கொண்டே அவா்கள் எங்களிடம் உதவி கேட்டனா்.

பொதுத் துறை நிறுவனங்கள் பரஸ்பரம் உதவிக் கொள்வதில் எந்தவிதத் தவறும் இல்லை. இதனால் டிஎன்எம்எஸ்சி-இன் சேவைகள் எந்த விதத்திலும் பாதிக்கப்படாது என்றாா் அவா்.