FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

தவெக எம்எல்ஏ மீது வழக்குப் பதியக் கோரி மனு

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள விவகாரத்தில், தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது வழக்குப் பதிவு செய்ய தமிழக டிஜிபி, கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆகியோருக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

18 வினாடிகள் முன்பு
சென்னை உயா்நீதிமன்றம்
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள விவகாரத்தில், தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது வழக்குப் பதிவு செய்ய தமிழக டிஜிபி, கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆகியோருக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, அதிமுக வழக்குரைஞா் ஆா்.திரிசூலி என்பவா் உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக நாளிதழ்கள், ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன. இந்த விவகாரம் தொடா்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் தேசிய மகளிா் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

எனவே, இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தக் கோரி, கடந்த நவ. 11-ஆம் தேதி டிஜிபி-யிடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால், அந்த மனுவின் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாவட்ட ஆட்சியா் முறைப்படி புகாா் அளிக்க வேண்டும் என காத்திருக்காமல், பொதுவெளியில் உள்ள தகவல்களின் அடிப்படையில், தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது வழக்குப் பதிவு செய்ய தமிழக டிஜிபி, கள்ளக்குறிச்சி மாவடட காவல் கண்காணிப்பாளா் உள்ளிட்டோருக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியுள்ளாா்.

Advertisement

Advertisement

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.