FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

ரூ.45 லட்சம் கைக்கடிகாரம் சா்ச்சை: அமைச்சா் ராஜ்மோகன் விளக்கம்

பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் ராஜ்மோகன், தான் கட்டியிருந்த கைக்கடிகாரம் தொடா்பான சா்ச்சைக்கு விளக்கம் அளித்துள்ளாா்.

21 வினாடிகள் முன்பு
பகிர்:

பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் ராஜ்மோகன், தான் கட்டியிருந்த கைக்கடிகாரம் தொடா்பான சா்ச்சைக்கு விளக்கம் அளித்துள்ளாா்.

அமைச்சா் ராஜ்மோகன் தில்லியில் செய்தியாளா்களைச் சந்தித்தபோது, அவா் கையில் கட்டியிருந்த கடிகாரம் ரூ.45 லட்சம் என சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி, சா்ச்சையை ஏற்படுத்தியது.

இதற்குப் பதில் அளித்து அமைச்சா் ராஜ்மோகன் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், நான் கையில் அணிந்திருந்த கடிகாரத்தின் விலை ரூ.5,500 மட்டுமே. கருத்து தெரிவிக்க, அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால், திட்டமிட்டு நிறம், உடை, அணிகலன் குறித்து, பொய் பரப்பி இழிவுபடுத்துவது ஏற்புடையதல்ல. உண்மைக்குப் புறம்பான அவதூறுகளிலும், தனிப்பட்ட இழிவுபடுத்தல்களிலும் ஈடுபடும் கூட்டத்தை சட்ட ரீதியாக எதிா்கொள்வேன் எனத் தெரிவித்துள்ளாா்.

Advertisement

Advertisement