26 நாள்களுக்குப் பிறகு தொடங்கிய உதகை மலை ரயில் சேவை; சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!
கனமழையால் ஏற்பட்ட மண் சரிவு சரி செய்யப்பட்ட நிலையில், 26 நாள்களுக்குப் பிறகு உதகை மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது குறித்து...
கனமழையால் ஏற்பட்ட மண் சரிவு சரி செய்யப்பட்ட நிலையில், 26 நாள்களுக்குப் பிறகு உதகை மலை ரயில் சேவை மீண்டும் வியாழக்கிழமை (நவ. 19) தொடங்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு தினசரி மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது இந்நிலையில் கடந்த அக். 23 ஆம் தேதி கனமழை காரணமாக உதகை செல்லும் சாலை மற்றும் தண்டவாளப் பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது.
Advertisement
Advertisement
இதையடுத்து, மலை ரயில் போக்குவரத்து கடந்த 26 நாள்களாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் சீரமைப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் இன்று மீண்டும் மலை ரயில் சேவை தொடங்கப்பட்டது.
மழை ரயிலில் பயணம் செய்யயும் சுற்றுலா பயணி ஒருவர் கூறுகையில், மலை ரயிலில் பயணம் செய்ய இரண்டு மாதங்களுக்கு முன்னதாகவே, பயணச்சீட்டு முன்பதிவு செய்து காத்திருந்ததாகவும் இன்று மீண்டும் மலை ரயில் சேவை தொடங்கப்பட்டதால் தங்களது குடும்பத்துடன் மகிழ்ச்சியுடன் பயணம் செய்வதாகவும் மலை ரயில் பயண அனுபவத்தை அறிந்து கொள்ள ஆவலுடன் பயணிப்பதாகவும் கூறினார்.