FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பூந்தமல்லி மெட்ரோ ரயில் நிலையம் எதிரில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படுமா..? - மக்கள் எதிர்பார்ப்பு

பூந்தமல்லி புறவழிச்சாலை மெட்ரோ ரயில் நிலையம் எதிரில் புதிய பேருந்து நிலையம் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து....

19 நவம்பர் 2026, 11:47 am
பூந்தமல்லி புறவழிச்சாலை மெட்ரோ ரயில் நிலையம். - டிஎன்எஸ்
பகிர்:

ஆவடி: பூந்தமல்லி புறவழிச்சாலை மெட்ரோ ரயில் நிலையம் எதிரில் உள்ள 5 ஏக்கர் அரசு நிலத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பூந்தமல்லி புறவழிச்சாலை மெட்ரோ நிலையத்தில் இருந்து வடபழனி வரை மெட்ரோ ரயில் சேவையை கடந்த மாதம் 15-ஆம் தேதி பிரதமர் நரேந்திரமோடி, தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதனால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயனடைந்து வருகின்றனர்.‌

Advertisement

Advertisement

சென்னையில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் செல்லும் பயணிகள், மெட்ரோ ரயில் மூலம் பூந்தமல்லி புறவழிச்சாலை மெட்ரோ ரயில் நிலையம் வந்தடைந்து, அங்கிருந்து பேருந்துகள் மூலம் ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர், திருத்தணி மற்றும் காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளுக்கு தங்களது பணி நிமிர்த்தமாக சென்று வருகின்றனர். இதேபோன்று வேலூர், ஆரணி , திருவண்ணாமலை, சித்தூர், திருப்பதி ஆகிய ஊர்களுக்கு பூந்தமல்லி புறவழிச்சாலை மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து செல்கின்றனர். தற்போது மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டுமானால், பூந்தமல்லி பேருந்து பணிமனை அருகில் உள்ள புறநகர் பேரூந்து நிலையத்திற்கு செல்ல வேண்டும். ஆனால், இந்த பேருந்து நிலையம் செல்ல, மெட்ரோ ரயில் பயணிகள் பூந்தமல்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் இறங்க வேண்டும். இங்கிருந்து ஒரு கி.மீ தூரம் நடந்து சென்று, பேருந்து பணிமனை அருகில் உள்ள பேருந்து நிலையம் அடைய வேண்டும். அங்கிருந்து வெளியூர் பேருந்துகளில் செல்ல வேண்டும். இதனால் பயணிகளுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்படுகிறது. ஆனால், வரதராஜபுரத்தில் உள்ள பூந்தமல்லி புறவழிச்சாலை மெட்ரோ ரயில் நிலையம் வழியாக வெளி மாவட்ட, மாநிலங்களுக்கு பேருந்துகள் செல்கின்றன. ஆனால் இந்த பேருந்துகள் இங்கே நிற்பது இல்லை. இதனால் பயணிகள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர்.

இதனால், பூந்தமல்லி பேருந்து பணிமனை அருகில் செயல்படும் வெளியூர் பேருந்து நிலையத்தை மூடிவிட்டு, பூந்தமல்லி புறவழிச்சாலை மெட்ரோ ரயில் நிலையம் அருகே வெளி மாநிலங்கள், மாவட்டங்களுக்கு பேருந்துகள் நின்று செல்ல தமிழ்நாடு அரசு உத்தரவிட வேண்டும்.

மேலும், புறவழிச்சாலை மெட்ரோ ரயில் நிலையம், எதிரில் உள்ள அரசுக்கு சொந்தமான 5 ஏக்கர் காலி நிலத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும். அப்படி அமைத்தால் சென்னையில் இருந்து மெட்ரோ ரயில் மூலம், பூந்தமல்லி புறவழிச்சாலை மெட்ரோ ரயில் நிலையம் வந்து இறங்கி, அங்கிருந்து வெளி மாநில, மாவட்டங்களுக்கு பேருந்துகள் மூலம் பயணிகள் சிரமின்றி செல்வதற்கு வசதியாக இருக்கும். எனவே பூந்தமல்லி புறவழிச்சாலை மெட்ரோ ரயில் நிலையம் அருகில் புதிய பேருந்து நிலையம் அமைக்க திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Will a new bus stand be built opposite the Poonamallee Metro station? Public expectation

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.