FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் சேவை நேரத்தில் மாற்றம்!

பூந்தமல்லி - வடபழனி இடையே இயங்கும் மெட்ரோ ரயில் சேவையின் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறித்து...

மெட்ரோ ரயில் சேவை - பிரதிப் படம்
பகிர்:

பூந்தமல்லி புறவழிச்சாலை - வடபழனி இடையே இயங்கும் மெட்ரோ ரயில் சேவையின் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் புதன்கிழமை (அக். 21) அறிவித்துள்ளது.

அதன்படி, பூந்தமல்லி புறவழிச்சாலை - வடபழனி இடையே வழக்கமாக காலை 7.00 மணிக்குத் தொடங்கும் மெட்ரோ ரயில் சேவை வரும் அக். 23 முதல் காலை 6.00 மணிக்கே தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மெட்ரொ நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

Advertisement

Advertisement

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் கட்டம்-11 வழித்தடம் 4-ல், பூந்தமல்லி புறவழிச்சாலை மெட்ரோ ரயில் நிலையம் முதல் வடபழனி மெட்ரோ ரயில் நிலையம் வரை 15 கி.மீ. நீளத்திற்கு 11 உயர்மட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில் 2026, அக்டோபர் 11 ஆம் தேதி மெட்ரோ ரயில் பயணிகள் சேவையை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தொடங்கியது.

இச்சேவை தொடங்கப்பட்டதைத் தொடர்ந்து, பயணிகளிடமிருந்து பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் வழித்தடம் 4-இல் ரயில் சேவை தொடங்கும் நேரத்தை 2026, அக்டோபர் 23 (வெள்ளிக்கிழமை) முதல் காலை 6.00 மணியாக மாற்றியமைப்பதில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மகிழ்ச்சியடைகிறது.

இந்த நேரமாற்றம் பயணிகளுக்கு கூடுதல் வசதியை வழங்குவதோடு, வடபழனி மற்றும் பூந்தமல்லி நோக்கி அதிகாலைப் பயணங்களை எளிதாக மேற்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

2026, அக்டோபர் 23, முதல் 15 கி.மீ. நீளமுள்ள இவ்வழித்தடத்தின் இரு திசைகளிலும் காலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை வழக்கமான மெட்ரோ இரயில் பயணிகள் சேவை இயக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

summary

The Chennai Metro Rail Corporation announced on Wednesday (Oct. 21) that the timings of the metro rail service running between Poonamallee Bypass and Vadapalani have been changed.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments