பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் சேவை: பிரதமர் மோடி தொடக்கி வைத்தார்!
பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் சேவையை தொடக்கி வைத்த பிரதமர் மோடி.
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ஆம் கட்டமான பூந்தமல்லி - வடபழனி வழித்தடத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று(அக். 11) தொடக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் விஜய்யும் பங்கேற்றார்.
சென்னை போரூரில் உள்ள மெட்ரோ நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் விஜய் ஆகிய இருவரும் கொடியசைத்து தொடக்கி வைத்தனர்.
ரூ. 4,900 கோடியில் கட்டப்பட்ட சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ஆம் கட்டமான பூந்தமல்லி-வடபழனி வழித்தடத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடக்கி வைத்தார்.
Advertisement
Advertisement
மேலும், போரூர் புறவழிச்சாலை நிலையத்திலிருந்து பூந்தமல்லி புறவழிச்சாலை நிலையம் வரை மெட்ரோ ரயிலில் பிரதமர் மற்றும் முதல்வர் பயணித்தனர்.
தமிழகத்துக்கு ரூ.13,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, பணிகள் நிறைவடைந்த திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி சென்னையில் இன்று (அக். 11) தொடக்கி வைக்கிறார்.
பின்னர், சென்னை ஐஐடிக்கு பிரதமா் மோடி வருகிறார். அங்குள்ள ஜலகண்டேஸ்வரர் கோயிலில் வழிபாடு செய்கிறார். தொடர்ந்து, சென்னை ஐஐடியில் உள்ள சுதா கோபாலகிருஷ்ணன் மூளை ஆராய்ச்சி மையத்தை அவர் பாா்வையிடுவார்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று(அக். 11) சென்னை வந்துள்ளார். தில்லியிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடியை, முதல்வர் சி. ஜோசப் விஜய் விமான நிலையத்துக்கு சென்று பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் முதல்வர் விஜய்யும் பங்கேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Prime Minister Narendra Modi inaugurated the Poonamallee–Vadapalani corridor—part of Phase 2 of the Chennai Metro Rail project—today (Oct. 11).
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.