முகப்பு
சென்னை

பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ! நாளைமுதல் காலை 7 மணிக்கு தொடங்கும்!

பூந்தமல்லி- வடபழனி இடையேயான மெட்ரோ ரயில் சேவை காலை 6 மணிக்குப் பதிலாக செவ்வாய்க்கிழமை முதல் (நவ. 24) காலை 7 மணிக்குத் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

23 நவம்பர் 2026, 12:23 am
பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ! 
நாளைமுதல் காலை 7 மணிக்கு தொடங்கும்!
பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ - கோப்புப்படம்
பகிர்:

பூந்தமல்லி- வடபழனி இடையேயான மெட்ரோ ரயில் சேவை காலை 6 மணிக்குப் பதிலாக செவ்வாய்க்கிழமை முதல் (நவ. 24) காலை 7 மணிக்குத் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பூந்தமல்லி புறவழிச்சாலை மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து போரூா் வழியாக வடபழனி நிலையத்துக்கு மஞ்சள் வழித்தடத்தில் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்தப் பகுதியில் உள்ள 7 ரயில் நிலையங்களில் பணிகளை விரைந்து முடிக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது அந்த வழித்தடத்தில் தினமும் காலை 6 மணிக்கு ரயில் சேவை தொடங்குகிறது.

Advertisement

Advertisement

ரயில் நிலையப் பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டியிருப்பதால் அந்த வழித்தடத்தில் காலை நேர மெட்ரோ ரயில் சேவை தொடங்கும் நேரத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி, செவ்வாய்க்கிழமை முதல் (நவ.24) மஞ்சள் வழித்தடத்தில் காலை 6 மணிக்குத் தொடங்கவேண்டிய மெட்ரோ ரயில் சேவை காலை 7 மணிக்கே தொடங்கும். மெட்ரோ ரயில் சேவை நேர மாற்றத்தைக் கருத்தில் கொண்டு பயணங்களைத் திட்டமிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

summary

Poonamallee - Vadapalani Metro! Starting from 7 AM tomorrow!