FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் சேவை நேரம் அறிவிப்பு!

பூந்தமல்லி - வடபழனி இடையே மெட்ரோ ரயில் இயக்கப்படும் நேரம் அறிவிப்பு...

10 அக்டோபர் 2026, 4:31 pm IST
மெட்ரோ ரயில் சேவை - பிரதிப் படம்
பகிர்:

சென்னை பூவிருந்தவல்லி - வடபழனி இடையே மெட்ரோ ரயில் சேவை நாளை (அக்.11) தொடங்கப்படவுள்ள நிலையில் மெட்ரோ ரயில் சேவை குறித்த நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுளளதாவது:

சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் கட்டம்-1 வழித்தடம் 4-ல் பூவிருந்தவல்லி புறவழிச்சாலை மெட்ரோ ரயில் நிலையம் முதல் வடபழனி மெட்ரோ ரயில் நிலையம் வரை 15 கி.மீ. நீளத்திற்கு 11 உயர்மட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில் நாளை (அக்டோபர் 11, 2026) முதல் மெட்ரோ ரயில் பயணிகள் சேவை தொடங்கப்படுகிறது என்பதை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறது.

Advertisement

Advertisement

பூவிருந்தவல்லி புறவழிச்சாலை. பூவிருந்தவல்லி பேருந்து நிலையம், பூவிருந்தவல்லி அரசு மருத்துவமனை, கரையான் சாவடி, குமணண் சாவடி, காட்டுப்பாக்கம், அயப்பன்தாங்கல், தெள்ளியாரகரம், போரூர் புறவழிச்சாலை, போரூர் சந்திப்பு மற்றும் வடபழனி ஆகிய 11 மெட்ரோ ரயில் நிலையங்கள் இந்த வழித்தடத்தில் உள்ளன.

தொடக்க நாளான 11, அக்டோபர் 2026 அன்று மெட்ரோ ரயில் சேவைகள் மாலை 4 மணி முதல் தொடங்கி, இரு திசைகளிலும் இரவு 9 மணி வரை இயக்கப்படும். அதனைத் தொடர்ந்து, மறுநாளான 12 அக்டோபர் 2026 முதல், இந்த 15 கி.மீ. நீளமுள்ள வழித்தடத்தில் இரு திசைகளிலும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மெட்ரோ ரயில் சேவைகள் இயக்கப்படும்.

பூவிருந்தவல்லி புறவழிச்சாலை மெட்ரோ முதல் வடபழனி மெட்ரோ இடையே வழித்தடம் 4-ல் (மஞ்சள் வழித்தடம்) மெட்ரோ இரயில் கால அட்டவணை மற்றும் இயக்க இடைவெளி:

திங்கட்கிழமை - சனிக்கிழமைகளில் காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் 10 நிமிடத்திற்கு ஒருமுறையும் மற்ற நேரங்கள் 15 நிமிடத்திற்கு ஒருமுறையும்

ஞாயிறு மற்றும் விடுமுறை நாள்களில் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை 15 நிமிடத்திற்கு ஒருமுறையில் ஒரு ரயில் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாள்தோறும் இரு முனையங்களிலிருந்தும் (பூவிருந்தவல்லி புறவழிச்சாலை மெட்ரோ மற்றும் வழித்தடம் 4 வடபழனி மெட்ரோ) கடைசி மெட்ரோ இரயில் சேவை இரவு 9 மணிக்கு புறப்படும்.

summary

Poonamallee - Vadapalani Metro Rail service timings announced

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments