✕
முகப்பு

திமுக முன்னாள் அமைச்சர் மூர்த்தியின் உறவினர்கள் வீடுகளிலும் சோதனை!

முன்னாள் அமைச்சர் மூர்த்தியின் உறவினர்கள் வீடுகளில் மத்திய குற்றப்பிரிவு சோதனை பற்றி..

மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் சோதனை
பகிர்:

திமுக முன்னாள் பத்திரப்பதிவு அமைச்சர் மூர்த்தி வீட்டில் சோதனையை தொடர்ந்து அவரது உறவினர்கள் வீடுகளிலும் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் சோதனை நடத்தினர்.

முன்னாள் பத்திர பதிவு அமைச்சர் மூர்த்தியின் உறவினரான பாலமேடு பகுதியில் தன்ராஜ், அலங்காநல்லூர் பகுதியில் பொன்ராம், பூவந்தி பகுதியில் உள்ள ராஜாமணி ஆகியோரது வீடுகளிலும் மதுரை மாவட்ட மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக, கல் குவாரி விதிமீறல் வழக்கு தொடர்பாக திமுக முன்னாள் அமைச்சர் பி. மூர்த்தி வீடுகளில் போலீசார் சோதனை நடத்தி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் அமைச்சரின் வீட்டின் முன் அவரது ஆதரவாளர்கள் குவிந்துள்ளனர்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.