குக் வித் கோமாளி புகழ் அஸ்வினுக்கு டும் டும்! காதலியை கரம்பிடித்தார்!
குக் வித் கோமாளி அஸ்வின், காதலியை கரம்பிடித்தார், ஏராளமானோர் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று திரைப்பட நடிகராக மாறிய அஸ்வினுக்கு கோவையில் இன்று மிகப் பிரமாண்டமான முறையில் திருமணம் நடைபெற்றது.
ஒரு பக்கம் குக் வித் கோமாளி மறு பக்கம் காதல் பாடல்கள் மூலம் ஏராளமான பெண் ரசிகர்களை பெற்றிருக்கும் அஸ்வின் - ஷிவாங்கி இணை, குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சி அதிகம் பேரால் பார்க்கப்பட ஒரு காரணமாக இருந்தது.
ஏற்கனவே, அடிபொளி, குட்டி பட்டாஸ் உள்ளிட்ட பாடல்கள் வெளியானபோது, அது பெண் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்டதற்குக் காரணமே அஸ்வினாகத்தான் இருந்தது. சமூக வலைத்தளங்களில் இந்த பாடல்களைக் கொண்டாடித் தீர்த்தார்கள்.
Advertisement
Advertisement
சினிமாவில் பெரிய வாய்ப்புகளுக்காகக் காத்திருந்தார் அஸ்வின். என்ன சொல்லப் போகிறாய், செம்பி, ஹாட்ஸ்பாட் 2 மச் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தாலும், அவருக்கு தொடர்ந்து பெரிய அளவில் சினிமா வாய்ப்புகள் வரவில்லை.
இந்த நிலையில்தான், கோவையில் இன்று அஸ்வின் திருமண புகைப்படங்கள் வெளியாகி பெண் ரசிகைகளுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.
நேற்று வரை அஸ்வின் திருமணம் பற்றிய எந்த செய்தியும் வெளியாகாத நிலையில், தற்போது அவரது திருமண புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இது காதல் திருமணம் என்றும் தெரிய வந்துள்ளது. ஆனால் ரகசியமாக திருமணம் நடைபெறவில்லை. இரு வீட்டார் சம்மதத்துடன் கோலாகலமாகவே திருமணம் நடந்துள்ளது.
மணப்பெண் யார் என்று தேடியதில், அவரது பெயர் புவனேஸ்வரி என்பதும், அவரும் திரைப்படத்தைச் சேர்ந்த குடும்பப் பின்னணியைக் கொண்டவர் என்பதும் தெரிய வந்துள்ளது. புவனேஸ்வரி, ரஜினி, கமல் உள்ளிட்டோரை இயக்கிய இயக்குநர் ராஜசேகரின் பேத்தியாம். நீண்ட நாள் காதலியை இன்று மணமுடித்துள்ளார் அஸ்வின். அவருக்கு ஏராளமானோர் தங்களுடைய வாழ்த்துகளை வெளியிட்டு வருகிறார்கள்.
ஆனால், அஸ்வின் தன்னுடைய திருமண தகவலை ஏன் ரகசியமாக வைத்திருந்தார், இதில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தன்னுடன் பணியாற்றியவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதா? என்பதெல்லாம் தெரியவரவில்லை.