FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் நம்பிக்கையை பாழாக்காதீர்கள்: அஸ்வின்

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் நீக்கப்பட்டது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கேள்வி எழுப்பியுள்ளார்.

17 அக்டோபர் 2026, 4:25 pm IST
யஷஸ்வி ஜெய்ஸ்வால்
பகிர்:

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் நீக்கப்பட்டது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20, 5 ஒருநாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் வருகிற அக்டோபர் 22 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களுக்கான இந்திய அணியை பிசிசிஐ நேற்று (அக்டோபர் 16) அறிவித்தது.

Advertisement

Advertisement

ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இடம்பெறவில்லை. டெஸ்ட் தொடருக்கான அணியில் அவர் இடம்பெற்றுள்ளார்.

ரவிச்சந்திரன் அஸ்வின் - கோப்புப் படம்

இந்த நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் நீக்கப்பட்டது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: நியூசிலாந்துக்கு எதிரான கடைசி இரண்டு ஒருநாள் போட்டிகளில் கேப்டன் ஷுப்மன் கில் விளையாடப் போவதில்லை என்றால், அந்த இடத்தை கண்டிப்பாக யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு அளித்திருக்க வேண்டும். ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் ஜெய்ஸ்வால் இடம்பெறாதது மிகவும் துரதிருஷ்டவசமானது. ஏனெனில், இவையனைத்தும் அவரது நம்பிக்கையை பாழாக்கிவிடும்.

ஷுப்மன் கில் கடைசி இரண்டு ஒருநாள் போட்டிகளில் விளையாட முடியாததை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. கே.எல்.ராகுலின் சூழ்நிலையையும் என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு ஒரு போட்டியில்கூட விளையாட வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. இப்படி செய்தால் அவரது நம்பிக்கை முழுவதும் பாழாகிவிடும். அவர் கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு விளையாடியதைப் போல தற்போது பேட்டிங் செய்வதில்லை. அவரது ஆட்டத்தில் மிகப் பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளார்.

யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஒரு ரன் மெஷின். அவரது நம்பிக்கை குறைந்து வருவது அணி நிர்வாகத்துக்கு தெரியும் பட்சத்தில், அவருக்கு விளையாட போதிய வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர வேண்டும். ஆனால், அவருக்கு வாய்ப்புகள் கிடைப்பதே இல்லை. இது நியாயமே கிடையாது. டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ஜெய்ஸ்வால் தயாராக வேண்டும் என்பது எனக்குப் புரிகிறது. ஆனால், அவர் எப்போது கடைசியாக இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் விளையாடினார். அதேபோல, அவர் எப்போது இந்திய அணிக்காக கடைசியாக டி20 மற்றும் டெஸ்ட் போட்டியில் விளையாடினார். அவர் சர்வதேச கிரிக்கெட்டில் அதிகமாக விளையாடவே இல்லை.

யஷஸ்வி ஜெய்ஸ்வால் மிகவும் சிறப்பான ஃபார்மில் உள்ளார். அவர் தொடர்ச்சியாக அணிக்காக ரன்கள் குவித்து வருகிறார். ஆனால், அவருக்கு அதிகம் விளையாட வாய்ப்புகள் கிடைக்காதது மிகவும் துரதிருஷ்டவசமானது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் மீது கண்டிப்பாக அணி நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டும். அவர் மிகவும் மதிப்புக்க வீரர் என்றார்.

summary

Former Indian team player Ravichandran Ashwin has questioned the exclusion of opening batter Yashasvi Jaiswal from the ODI series against New Zealand.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments