முகப்பு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: விராட் கோலியை பின்னுக்குத் தள்ளிய ஜெய்ஸ்வால்!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அதிக ரன்களைக் குவித்து விராட் கோலியைப் பின்னுக்குத் தள்ளிய ஜெய்ஸ்வாலைப் பற்றி...

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: விராட் கோலியை பின்னுக்குத் தள்ளிய ஜெய்ஸ்வால்!
விராட் கோலி - ஜெய்ஸ்வால்.
பகிர்:

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அதிக ரன்களைக் குவித்த இந்திய வீரர்கள் பட்டியலில் விராட் கோலியைப் பின்னுக்குத் தள்ளி ஜெய்ஸ்வால் முன்னேறியுள்ளார்.

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20 மற்றும் ஒருநாள் தொடரைக் கைப்பற்றிய நிலையில், டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளும் மோதும் முதலாவது டெஸ்ட் வெல்லிங்டனில் நேற்று தொடங்கியது.

இந்தப் போட்டியில் முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 368 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ஹென்றி நிக்கோல்ஸ் 175* ரன்களையும், கிளென் பிலிப்ஸ் 118 ரன்களையும் எடுத்தனர். இந்திய தரப்பில் பும்ரா 4 விக்கெட்டுகளையும், தீப் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

Advertisement

Advertisement

அதனைத்தொடர்ந்து ஆடிய இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 39 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 159 ரன்களைச் சேர்த்துள்ளது. இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 85 ரன்களில் ஆட்டமிழக்க கே.எல். ராகுல் 52 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார்.

நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 85 ரன்களைச் சேர்த்ததன் மூலம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அதிக ரன்களைக் குவித்த இந்திய வீரர்கள் பட்டியலில் விராட் கோலியைப் பின்னுக்குத் தள்ளியுள்ளார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் விராட் கோலி 79 இன்னிங்ஸ்களில் 2,617 ரன்களை எடுத்ததே சாதனையாக இருந்த நிலையில், ஜெய்ஸ்வால் 57 இன்னிங்ஸ்களில் 2,673 ரன்களைக் குவித்து 5-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

summary

Yashasvi Jaiswal is now ahead of Virat Kohli in the list of batters with the most runs for India in the World Test Championship (WTC).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.