FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

யாரும் அநியாயமாக நடந்துகொள்ளவில்லை; ஜெய்ஸ்வால் கடினமாக உழைக்க வேண்டும்: பயிற்சியாளர்

இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் கடினமாக உழைக்க வேண்டும் என பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கோட்டக் தெரிவித்துள்ளார்.

55 வினாடிகள் முன்பு
யஷஸ்வி ஜெய்ஸ்வால்
பகிர்:

இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் கடினமாக உழைக்க வேண்டும் என பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கோட்டக் தெரிவித்துள்ளார்.

இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை (செப்டம்பர் 27) தொடங்குகிறது. முதல் ஒருநாள் போட்டி திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது.

இந்த நிலையில், இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் ரோஹித் சர்மா இருவரும் அணியின் முதல் தெரிவாக இருப்பார்கள் என பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கோட்டக் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணியில் வீரர்கள் களமிறங்கி விளையாடும் இடங்களுக்கு நிறைய போட்டி இருப்பதாக நினைக்கிறேன். வீரர்கள் பலரும் சிறப்பாக விளையாடுவதால் அதிகப்படியான போட்டி நிலவுகிறது. ஜெய்ஸ்வால் மிகவும் சிறந்த பேட்டர் என்பதும், அவருக்கு வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சிறப்பாக விளையாடுவார் என்பதும் நம் அனைவருக்கும் தெரியும். அவர் அணியில் முக்கிய வீரராக அங்கம் வகிக்கிறார்.

அணி நிர்வாகத்தில் உள்ள பணியாளர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் திறமையை கவனித்து வருகின்றனர். தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீரும் அவரிடம் நிறைய பேசியிருக்கிறார். ஆனால், அணியில் மூன்று சிறந்த விக்கெட் கீப்பர்கள் இருந்தாலும், ஒருவர் மட்டுமே பிளேயிங் லெவனில் இடம்பெற்று விளையாட முடியும். அதனால், யஷஸ்வி ஜெய்ஸ்வாலிடம் யாரும் அநியாயமாக நடந்துகொள்ளவில்லை. அவர் தொடர்ந்து கடினமாக உழைக்க வேண்டும். அவரது வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டும் என்றார்.

summary

Batting coach Sitanshu Kotak has stated that Yashasvi Jaiswal, one of the young players in the Indian team, needs to work hard.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments