FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

விக்கெட் கீப்பிங் பயிற்சி எதற்காக? பேட்டிங்கில் கவனம் செலுத்த ஜெய்ஸ்வாலுக்கு முன்னாள் வீரர் அறிவுரை!

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் விக்கெட் கீப்பிங் பயிற்சியில் ஈடுபடாமல் பேட்டிங்கில் கவனம் செலுத்த வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் தெரிவித்துள்ளார்.

10 அக்டோபர் 2026, 4:52 pm IST
யஷஸ்வி ஜெய்ஸ்வால்
பகிர்:

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் விக்கெட் கீப்பிங் பயிற்சியில் ஈடுபடாமல் பேட்டிங்கில் கவனம் செலுத்த வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் விக்கெட் கீப்பிங் பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக ரஞ்சி கோப்பை மும்பை அணியின் கேப்டன் சித்தேஷ் தெரிவித்தார். விக்கெட் கீப்பிங்கில் மட்டுமின்றி, பந்துவீச்சிலும் அவர் கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்தார்.

இந்த நிலையில், தொடக்க ஆட்டக்காரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் விக்கெட் கீப்பிங் பயிற்சியில் ஈடுபடாமல் அவரது பேட்டிங்கில் கவனம் செலுத்த வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

வாசிம் ஜாஃபர்

இது தொடர்பாக அவர் பேசியதாவது: யஷஸ்வி ஜெய்ஸ்வால் விக்கெட் கீப்பிங் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் என்பதைக் கேட்டதும் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. சிறுவயதிலிருந்து விக்கெட் கீப்பிங் பயிற்சியில் ஈடுபடாமல் திடீரென விக்கெட் கீப்பிங் செய்வது மிகவும் கடினம். அதுமட்டுமின்றி, விக்கெட் கீப்பருக்கு வேலைப்பளு அதிகம். ஜெய்ஸ்வால் விக்கெட் கீப்பிங் மேற்கொண்டு நன்றாக செயல்படுகிறார் என வைத்துக் கொண்டாலுமே அணியில் எங்கு இடமிருக்கிறது. அணியில் இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் மற்றும் ரிஷப் பந்த் போன்ற விக்கெட் கீப்பர்கள் உள்ளார்கள்.

யஷஸ்வி ஜெய்ஸ்வால் வெள்ளைப் பந்து போட்டிகளில் விக்கெட் கீப்பராகவே பயிற்சியில் ஈடுபடுகிறார் என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும். டெஸ்ட் கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பராக செயல்படுவது மிகவும் கடினம். ஆனால், சிறுவயதிலிருந்து விக்கெட் கீப்பிங் பயிற்சியில் ஈடுபடாமல் திடீரென விக்கெட் கீப்பராக முயற்சிப்பது சற்று வேடிக்கையாக உள்ளது. நீங்கள் வேகமாக வளர்த்துக் கொள்ளும் அளவுக்கு விக்கெட் கீப்பிங் திறமை என்பது அவ்வளவு எளிது கிடையாது. ரஞ்சி கோப்பை மற்றும் நியூசிலாந்து தொடர்கள் வருவதால் ஜெய்ஸ்வால் அவரது பேட்டிங்கில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

summary

A former Indian player has stated that Indian opener Yashasvi Jaiswal should focus on batting instead of engaging in wicket-keeping practice.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments