விக்கெட் கீப்பிங் பயிற்சியில் ஈடுபடும் யஷஸ்வி ஜெய்ஸ்வால்! காரணம் என்ன?
இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் விக்கெட் கீப்பிங் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் விக்கெட் கீப்பிங் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இருப்பினும், இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் இடத்துக்கு கடும் போட்டி நிலவுவதால் சில தொடர்களில் அவருக்கு இடம் கிடைக்காமல் போனது. ஒருநாள் உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணியில் அவர் இடம்பெறுவாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
இந்த நிலையில், தொடக்க ஆட்டக்காரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் பந்துவீச்சு மற்றும் விக்கெட் கீப்பிங் பயிற்சியில் ஈடுபட்டு வருவது முக்கியத்துவம் பெறுகிறது.
Advertisement
Advertisement
யஷஸ்வி ஜெய்ஸ்வால் விக்கெட் கீப்பிங் பயிற்சியில் ஈடுபடுவது குறித்து ரஞ்சி டிராபி மும்பை அணியின் கேப்டன் சித்தேஷ் கூறியதாவது: யஷஸ்வி ஜெய்ஸ்வால் விக்கெட் கீப்பிங் பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக உணர்கிறேன். அவர் என்னிடம் கூறியதிலிருந்து நான் அதனையே புரிந்துகொண்டேன். அவர் எதிர்காலத்தில் மும்பை அணிக்காக அல்லது இந்திய அணிக்காக விக்கெட் கீப்பிங் செய்ய விரும்புகிறார். அதனை இலக்காகக் கொண்டு அவர் விக்கெட் கீப்பிங் பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாக உணர்கிறேன். ஆனால், விக்கெட் கீப்பிங் குறித்து அவரது மனதில் என்ன உள்ளது என்பது எனக்கு உறுதியாகத் தெரியவில்லை என்றார்.
டெஸ்ட் போட்டிகளில் தனக்கான இடத்தை உருவாக்கிக் கொண்டுள்ள யஷஸ்வி ஜெய்ஸ்வால், டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் அவருக்கான தொடக்க ஆட்டக்காரர் இடத்துக்கு கடும் போட்டியை எதிர்கொண்டு வருகிறார்.
ஒருநாள் போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரர்கள் இடத்துக்கு ரோஹித் சர்மா மற்றும் கேப்டன் ஷுப்மன் கில் உள்ள நிலையில், டி20 போட்டிகளில் வைபவ் சூர்யவன்ஷி அவருக்குப் போட்டியாக உருவெடுத்துள்ளார்.
தொடக்க ஆட்டக்காரர் இடத்துக்கு கடும் போட்டி நிலவுவதால், பந்துவீச்சு மற்றும் விக்கெட் கீப்பிங்கிலும் ஜெய்ஸ்வால் கவனம் செலுத்தி வருவதாகக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
Yashasvi Jaiswal, one of the young players of the Indian team, is undergoing wicket-keeping training.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.