உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் தென்னாப்பிரிக்கா ஆதிக்கம்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் நடப்பு சாம்பியனான தென்னாப்பிரிக்க அணி தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருவதைப் பற்றி...
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் நடப்பு சாம்பியனான தென்னாப்பிரிக்கா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி மூன்று டி20, மூன்று ஒருநாள் மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
தென்னாப்பிரிக்கா - வங்கதேசம் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஜோஹன்ஸ்பெர்க்கில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய வங்கதேசம் முதல் இன்னிங்ஸில் 400 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, தென்னாப்பிரிக்க அணி அதன் முதல் இன்னிங்ஸில் 557 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
Advertisement
Advertisement
இதனையடுத்து, 157 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய வங்கதேசம் 2-வது இன்னிங்ஸில் 168 ரன்களுக்கு ஆட்டமிழக்க தென்னாப்பிரிக்காவுக்கு 12 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
தென்னாப்பிரிக்க அணி 1.3 ஓவர்களில் இந்த இலக்கை எட்டி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தென்னாப்பிரிக்க அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் தென்னாப்பிரிக்கா அணி 8 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி ஆறில் வெற்றி பெற்றுள்ளது. இதனால், புள்ளி சதவிகிதம் 75 ஆக உள்ளது.
இதன்மூலம் தென்னாப்பிரிக்க அணி முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. அதே நேரத்தில் முதலிடத்திலிருந்த நியூசிலாந்து அணி 72.22 புள்ளி சதவிகிதத்துடன் இரண்டாம் இடத்திற்குச் சரிந்துள்ளது.
இந்தியாவுக்கு எதிராக வெலிங்டனில் நடைபெறும் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றால் முதலிடத்தைப் பிடிக்கும். ஒருவேளை தோல்வியடைந்தால், தோல்வியடைந்தால் நியூசிலாந்து அணி மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டு, ஆஸ்திரேலியா இரண்டாவது இடத்திற்கு முன்னேறும்.
அடுத்தாண்டு (2027) ஜூன் 9 ஆம் தேதி லண்டன் லார்ட்ஸின் நடைபெறும் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்க அணி விளையாடுவது ஓரளவுக்கு உறுதியாகியுள்ளது.
இரண்டு முறை இறுதிப்போட்டி வரை சென்று தோல்வியைத் தழுவிய இந்திய அணி 4-ஆவது இடத்தில் இருக்கிறது. நியூசிலாந்துக்கு எதிரான இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றால் 3-ஆவது இடத்துக்கு முன்னேறும்.
South Africa have now won six of their eight Tests in the ongoing WTC cycle while losing two. Their points percentage (PCT) is now 75, which is the best in the nine-team table, allowing them to take the top spot.