டிரா செய்யாமல் இந்திய அணி ஆட்டத்தை தொடர்ந்திருக்க வேண்டும்: அஸ்வின்
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை டிரா செய்யாமல் இந்திய அணி ஆட்டத்தைத் தொடர்ந்திருக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை டிரா செய்யாமல் இந்திய அணி ஆட்டத்தைத் தொடர்ந்திருக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
இந்தியா - நியூசிலாந்து இடையே வெலிங்டனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. ஆட்டத்தின் கடைசி நாளான இன்று (நவம்பர் 23) கிளன் பிலிப்ஸ் மற்றும் டேரில் மிட்செலின் வலுவான தடுப்பாட்டத்தால் போட்டி டிராவில் முடிவடைந்தது.
கடைசி நாள் ஆட்டம் நிறைவடைய ஒரு மணி நேரம் மீதமிருந்தும் போட்டி டிராவில் நிறைவடைந்தது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், போட்டியை டிரா செய்யாமல் இந்திய அணி ஆட்டத்தைத் தொடர்ந்திருக்க வேண்டும் என ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவரது யூடியூப் சேனலில் பேசியதாவது: கடைசி நாள் ஆட்டத்தின் மீதமிருந்த 15 ஓவர்களையும் விளையாடியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். இந்திய அணியின் வெற்றிக்கு 5 விக்கெட்டுகள் தேவைப்பட்டன. மீதமுள்ள ஓவர்களில் விக்கெட்டினைக் கைப்பற்ற முயற்சித்துப் பார்த்திருக்கலாம். போட்டியில் திடீரென என்ன நடக்கும் என்பது ஒருபோதும் யாருக்கும் தெரியாது. வாஷிங்டன் சுந்தருக்கு ஓவர்கள் கொடுத்து முயற்சித்திருக்கலாம். போட்டியை தொடர்ந்திருந்தால் இந்திய அணி வென்றிருக்கும் எனக் கூறவில்லை. ஆனால், வெற்றிக்காக முயற்சி செய்திருக்கலாம் என்றார்.