முகப்பு

முதல் டெஸ்ட் டிரா: இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதில் சிக்கல்!

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்ததால் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

5 வினாடிகள் முன்பு
முதல் டெஸ்ட் டிரா: இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதில் சிக்கல்!
இந்திய அணி வீரர்கள் - படம் | பிசிசிஐ
பகிர்:

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்ததால் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்தியா - நியூசிலாந்து இடையே வெலிங்டனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இதன் மூலம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறுவதற்கான இந்திய அணியின் புள்ளிகள் சதவிகிதம் 51.52 சதவிகிதத்திலிருந்து 50 சதவிகிதமாக குறைந்துள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-27 சுழற்சியில் இந்திய அணி இதுவரை 12 போட்டிகளில் விளையாடி 5 வெற்றிகள், 4 தோல்விகள், 3 டிரா பெற்றுள்ளன. நியூசிலாந்துக்கு எதிரான முதல் போட்டி டிரா ஆனதால், இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் 4-வது இடத்தில் தொடர்கிறது.

Advertisement

Advertisement

ஆஸ்திரேலிய அணி 69.23 சதவிகித புள்ளிகளுடன் தரவரிசையில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. நியூசிலாந்து அணி இரண்டாவது இடத்திலிருந்து மூன்றாவது இடத்துக்கு சறுக்கியுள்ளது. நியூசிலாந்து அணி 66.67 சதவிகித புள்ளிகள் பெற்றுள்ளன.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் நடப்பு சாம்பியனான தென்னாப்பிரிக்க அணி முதலிடத்தில் வலுவாக உள்ளது. வங்கதேசத்துக்கு எதிராக டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் தென்னாப்பிரிக்க அணி, இரண்டாவது டெஸ்ட்டில் வெற்றி பெற்று தன்னுடைய முதலிடத்தை மேலும் வலுவாக்கிக் கொள்ளும் எண்ணத்தில் உள்ளது.

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி டிரா ஆனதால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறுவதற்கான இந்திய அணியின் வாய்ப்பு கடினமாகியுள்ளது. இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதற்கான போட்டியில் நீடிக்க நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் வெற்றி பெறுவது மட்டுமின்றி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரையும் இந்திய அணி வெல்ல வேண்டும்.

இந்தியா - நியூசிலாந்து இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் வருகிற நவம்பர் 27 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் திடலில் அடுத்தாண்டு ஜூன் மாதம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

summary

The draw in the first Test match against New Zealand has created complications for the Indian team in reaching the World Test Championship final.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.