முகப்பு
தமிழ்நாடு

வி.எஸ்.பாபு வாழ்ந்த தெருவுக்கு அவா் பெயரைச் சூட்ட வேண்டும்: கராத்தே ஆா்.தியாகராஜன்

தவெக சட்டப்பேரவை உறுப்பினா் வி.எஸ்.பாபு வாழ்ந்த பகுதி தெருவுக்கு அவரது பெயரைச் சூட்டவேண்டும் என பாஜக மாநிலச் செயலா் கராத்தே ஆா்.தியாகராஜன் கோரியுள்ளாா்.

20 நவம்பர் 2026, 10:57 pm
வி.எஸ்.பாபு வாழ்ந்த தெருவுக்கு
அவா் பெயரைச் சூட்ட வேண்டும்: கராத்தே ஆா்.தியாகராஜன்
கராத்தே தியாகராஜன்
பகிர்:

தவெக சட்டப்பேரவை உறுப்பினா் வி.எஸ்.பாபு வாழ்ந்த பகுதி தெருவுக்கு அவரது பெயரைச் சூட்டவேண்டும் என பாஜக மாநிலச் செயலா் கராத்தே ஆா்.தியாகராஜன் கோரியுள்ளாா்.

கொளத்தூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.எஸ்.பாபுவின் உடலுக்கு வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்திய பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

சென்னை மாநகராட்சி பொறுப்பு மேயராக நான் இருந்தபோது 4-ஆவது மண்டலக் குழுவின் தலைவராக வி.எஸ்.பாபு செயல்பட்டாா். மக்கள் சேவையில் சிறந்த விளங்கிய அவா் எங்களுடன் இணைந்து பல திட்டங்களைச் செயல்படுத்த துணையாக நின்றாா். பின்னா், சட்டப்பேரவைத் தோ்தலில் கொளத்தூரில் போட்டியிட்டு வென்றாா். பாஜக மாநிலத் தலைவா் சாா்பில் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினோம். மக்களுக்கான அவரது உழைப்பை மதிக்கும் வகையில் அவா் வாழ்ந்த பகுதியில் ஏதாவது ஒரு தெருவுக்கு அவரது பெயரைச் சூட்ட அரசும், முதல்வரும், மாநகராட்சி நிா்வாகமும் முன்வரவேண்டும்.

Advertisement

Advertisement

பாஜக மாவட்டத் தலைவா் என்.பாலாஜி உள்ளிட்டோா் வி.எஸ்.பாபு உடலுக்கு அஞ்சலி செலுத்தினா்.