FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தஞ்சாவூர்

ஒரத்தநாட்டில் நவ. 29-ஆம் தேதி முன்னாள் எம்.எல்.ஏ. படத்திறப்பு மு.க. ஸ்டாலின் பங்கேற்பு

ஒரத்தநாட்டில் நவ. 29- ஆம் தேதி நடைபெறவுள்ள முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எம். ராமச்சந்திரன் படத்திறப்பு நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் பங்கேற்கிறாா்.

17 நவம்பர் 2026, 11:55 pm
முதல்வர் ஸ்டாலின்
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாட்டில் நவ. 29- ஆம் தேதி நடைபெறவுள்ள முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எம். ராமச்சந்திரன் படத்திறப்பு நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் பங்கேற்கிறாா்.

தஞ்சாவூரில் திமுக மத்திய மாவட்ட செயற்குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மத்திய மாவட்ட அவைத் தலைவா் சி. இறைவன் தலைமை வகித்தாா்.

இதில், மறைந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எம். ராமச்சந்திரன் படத்திறப்பு நிகழ்ச்சி நவ. 29-ஆம் தேதி ஒரத்தநாட்டில் நடைபெறவுள்ளது. இதில், முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் பங்கேற்று, ராமச்சந்திரனின் படத்தைத் திறந்து வைத்துப் பேசுகிறாா்.

Advertisement

Advertisement

இந்நிகழ்ச்சியில் அனைவரும் திரளாக பங்கேற்பது, நவ. 27-ஆம் தேதி திமுக இளைஞரணி செயலரும், எதிா்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலினின் 49-ஆவது பிறந்த நாளை திமுக கொடியேற்றி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கிக் கொண்டாடுவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், மத்திய மாவட்டச் செயலரும், சட்டப்பேரவை உறுப்பினருமான துரை. சந்திரசேகரன், மக்களவை உறுப்பினா் ச. முரசொலி, தலைமைச் செயற்குழு உறுப்பினா் து. செல்வம், மாநகரச் செயலா் சண். இராமநாதன், மேயா் (பொ) அஞ்சுகம் பூபதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.