✕
முகப்பு

சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (நவ.20) எந்தெந்த வழக்குகள் விசாரணை?

சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (நவ. 20) விசாரணைக்கு வரவுள்ள வழக்குகள் குறித்து...

9 வினாடிகள் முன்பு
சென்னை உயர்நீதிமன்றம் - (கோப்புப் படம்)
பகிர்:

பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிட்டதை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த மென்பொறியாளர் கௌதமன் தொடர்ந்த வழக்கு, தூத்துக்குடியில், பசுமை தாமிர உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க அனுமதி மறுத்த உத்தரவை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (நவ. 20) விசாரணைக்கு வரவுள்ளது.

இன்று விசாரணைக்கு வரவுள்ள முக்கிய வழக்குகள்

* தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில், பசுமை தாமிர உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க அனுமதி மறுத்த உத்தரவை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கு

Advertisement

Advertisement

* வனப்பகுதியில் கட்டப்பட்டுள்ள சட்டவிரோத தனியார் தங்கும் விடுதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து, அவற்றை அப்புறப்படுத்த அரசுக்கு உத்தரவிடக் கோரிய வழக்கு

* பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிட்டதை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த மென்பொறியாளர் கௌதமன் தொடர்ந்த வழக்கு

* தொழிலதிபர் பிரகாஷின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த போக்ஸோ சிறப்பு நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீடு வழக்கு

* ஜெம் கிரானைட்ஸ் வீரமணி உள்ளிட்டோருக்கு எதிராக போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுப் பதிவு உள்ளிட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடத்தப்படவிருக்கிறது.

Which cases are up for hearing at the Madras High Court today (Nov 20)?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.