முகப்பு

முதல்வர் விஜய் ஒரு போலி பெரியாரிஸ்ட்: உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

குடிஅரசு இதழ் முழுத் தொகுப்பு வெளியீட்டு விழாவில் உதயநிதி ஸ்டாலின் பேசியது குறித்து...

முதல்வர் விஜய் ஒரு போலி பெரியாரிஸ்ட்: உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!
உதயநிதி ஸ்டாலின்
பகிர்:

முதல்வர் விஜய்யை போல ஒரு போலி பெரியாரிஸ்டை பார்த்திருக்கிறீர்களா என உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் குடிஅரசு இதழ் முழுத் தொகுப்பு வெளியீட்டு விழா இன்று (நவ. 22) நடைபெற்றது. நிகழ்ச்சியில் நூலை வெளியிட்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார். அவரைத் தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முதல்வர் விஜய்யை விமர்சித்துப் பேசினார்.

அவர் பேசுகையில், “இன்று சில பேர் சொல்லலாம். கொள்கைத் தலைவர் பெரியார் பேரை வைத்துக் கொள்ளலாம். அவரின் புகைப்படங்களை வைத்துக் கொள்ளலாம். ஆனால், நாம் பரீட்சைக்கு படிக்கும்போது கஷ்டமான கேள்விகளை எல்லாம் சாய்ஸில் விட்டு விடுவோம். அதுபோல, நமது டம்மி முதலமைச்சர், பெரியாருடைய கொள்கை வாரிசு என்று சொல்லிக்கொண்டு புகைப்படங்களைப் போட்டுக் கொள்வார். ஆனால், சில கொள்கைகளை ஆப்ஷனில் வைத்துவிட்டு, சாய்ஸில் விட்டுவிட்டு சிலவற்றை மட்டும் நான் ஏற்றுக் கொள்கிறேன் என்று சொல்வார். அது என்னவென்று கேட்டால் தெரியாது.

Advertisement

Advertisement

இதை நான் ஏன் இப்போது சொல்கிறேன் என்று உங்களுக்குப் புரிந்திருக்கும். செஞ்சியில் ஒரு சிறுமியை 40 நாள்களாக தேடிக்கொண்டிருக்கிறோம். பெற்றோர்கள் தவித்துக் கொண்டிருக்கின்றனர். ஊரே சோகமாக இருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்களும் அந்தச் சிறுமிக்கு என்னவானது என பதட்டத்தில் உள்ளது.

காவல்துறையின் வேலை அந்த சிறுமியை கண்டுபிடிப்பது. இதை அனைவரும் வலியுறுத்தி வருகிறோம். ஆனால் அந்த காவல்துறைக்கு பொறுப்பேற்கக்கூடிய முதல்வர் இதுவரை வாயைத் திறந்து இதைப் பற்றிப் பேசியிருப்பாரா என்று பார்த்தீர்கள் என்றால், ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

குழந்தையை கண்டுபிடிக்க வேண்டிய காவல்துறை, கடைசியாக போலீஸ் ஸ்டேஷனில் யாகம் வளர்த்துக் கொண்டிருக்கின்றனர். இவர்கள்தான் பெரியாரிஸ்ட்.

இதற்கு முன் எந்த ஆட்சியிலும் இப்படி ஒரு கொடுமை நடந்தது கிடையாது. இன்னும் சொல்லப்போனால் வெறும் ஜோசியம், ஜாதகம், யாகம்னுதான் இன்று ஆட்சியே நடக்கிறது.

முதலமைச்சர் எந்த ஊருக்கு போனாலும், எந்த மாநிலத்துக்கு போனாலும், அங்க முதலில் அவர் போவது அங்குள்ள கோயிலுக்குதான். அதன் பிறகே மற்ற வேலைகள் நடக்கும்.

நாமெல்லாம் போலிச் சாமியாரைப் பார்த்திருக்கிறோம். ஆனால், ஒரு போலி பெரியாரிஸ்ட்டை பார்த்திருக்கீறீர்களா? ஒரு போலி முதல்வரை பார்த்திருக்கீறீர்களா?

ஆனால் இங்குக் கூடியிருக்கும் கூட்டம் அப்படிப்பட்ட கூட்டம் இல்லை. பகுத்தறிவு, சுயமரியாதை, மூடநம்பிக்கை எதிர்ப்புன்னு பெரியாருடைய அனைத்துக் கொள்கைகளையும் முழுவதுமாக ஏற்றுக்கொண்ட முழுமையான பெரியாரிஸ்ட்டுகள் நாம்” என்று பேசியுள்ளார்.

summary

Chief Minister Vijay is a fake Periyarite: Udhayanidhi Stalin’s criticism!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.