முகப்பு

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் தமிழக அரசு மறுஆய்வு மனு: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு

உச்சநீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை மறுசீராய்வு செய்ய தமிழ்நாடு அரசு மனுதாக்கல் செய்துள்ளது வரவேற்பிற்குரியது என இந்தியக் கம்யூனிஸ்ட் கூறியிருப்பது...

58 வினாடிகள் முன்பு
திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் தமிழக அரசு மறுஆய்வு மனு:  இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் - கோப்புப்படம்
பகிர்:

திருப்பரங்குன்றம் பிரச்னையில் உச்சநீதிமன்றத்தின் அறிவியல்பூர்வமற்ற இடைக்கால உத்தரவை மறுசீராய்வு செய்ய தமிழ்நாடு அரசு மனுதாக்கல் செய்துள்ளது வரவேற்பிற்குரியது என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு .வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருப்பதாவது:

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சர்வே தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதித்த உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி, தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.

Advertisement

Advertisement

தமிழ்நாடு அரசின் இந்த செயலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது.

சிறந்த வழக்குரைஞர்களை கொண்டு வாதாடி, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் பாரம்பரியமாக ,நீண்டகாலமாக கடைபிடிக்கப்படும் தீபம் ஏற்றும் நடைமுறையை பாதுகாக்க வேண்டும்.

பிரிட்டிஷ் ஆட்சி காலத்து சர்வே தூணில் , தீபம் ஏற்ற வேண்டும் என அரசியல் நோக்கோடு பிரச்னையை கிளப்பி, மதரீதியில் மக்களை பிளவுபடுத்த முயலும் வகுப்புவாத சக்திகளின் சூழ்ச்சிகளை முறியடித்திட வேண்டும்.

மதநல்லிணக்கத்தையும்,மதச்சார்பின்மையும், மக்கள் ஒற்றுமையையும் பாதுகாத்திட அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்திட வேண்டுமென என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Tamil Nadu government's review petition in Tiruparangunram Deepam issue: Communist Party welcomes

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.